Madurai

News May 16, 2024

மகளை எரிக்க முயன்ற பெற்றோர் உட்பட 6 பேர் கைது

image

மதுரை அருகே ஆதனூரைச் சேர்ந்தவர் தமிழ். இவரது மகள் வைகைச் செல்வி(24) வயிற்று வலி காரணமாக அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை போலீசுக்கு மறைத்து இன்று சல்வார்பட்டி சுடுகாட்டிற்கு எரிப்பதற்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த ஆதனூர் விஏஓ சிவலிங்கம் போலீசில் புகார் செய்தார். அலங்காநல்லூர் போலீசார் பெற்றோர் உட்பட 6 பேரை இன்று கைது செய்தனர்.

News May 16, 2024

மதுரை:கனமழை முதல் அதி கனமழை

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News May 16, 2024

மதுரை மழைப்பொழிவு விவரம்

image

மதுரையில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாடிப்பட்டி பகுதியில் 9 செ.மீட்டரும், திருமங்கலம், மேட்டுபட்டி, சாத்தியார் ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், ஆண்டிப்பட்டி, மதுரை விமான நிலையம், பெரியபட்டி ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும், கள்ளந்திரியில் 4 செ.மீட்டரும், மதுரை நகரம் மற்றும் வடக்கு, மேலூர், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் பதிவானது.

News May 16, 2024

பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

image

மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதானம் மதுரை மாநாட்டு மையத்தில் “நான் முதல்வன் கல்லூரி கனவு” மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில் இன்று (16.05.2024)நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

News May 16, 2024

மதுரையில் பெய்த மழை அளவு விவரம்

image

மதுரை மாவட்டத்தில் நேற்று(மே 15) பரவலாக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வாடிப்பட்டியில் 8.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருமங்கலத்தில் 7 செ.மீ மழையும், மேட்டுப்பட்டியில் 6 செ.மீ மழையும், ஆண்டிபட்டியில் 5.6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் சராசரியாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று(மே 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

மதுரை: அரசு பள்ளியில் குவியும் மாணவர்கள்!

image

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 சேர்வதற்காக நேற்று நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் மாணவிகள் காத்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் செயல்படுவதால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

News May 16, 2024

வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் பொறுப்பு ஏற்பு

image

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் உள்ளது. இங்கு நேற்று(மே 15) மாவட்ட உரிமையியல் நீதிபதியாக ராம் கிஷோர், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியாக செல்லையா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்ற நீதிபதிகளுக்கு வாடிப்பட்டி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 16, 2024

மதுரை: கணினி மென்பொருளை திருடிய ஊழியர்

image

மதுரை பழங்காநத்தம் நேரு நகரை சோ்ந்த தம்பதி மோகன்ராஜ்-பிரகல்யா. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக மின்னணு வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் மையம் நடத்தி வருகின்றனர். இங்கு பணியாற்றும் சிவா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுவனத்தின் சிசிடிவி கேமராக்களை ‘ஹேக்’ செய்து அங்கிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கணினி மென்பொருளை திருடி சென்றுள்ளார். மோகன்ராஜ் அளித்த புகாரில் சிவா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News May 15, 2024

மதுரை: நாளை கனமழைக்கு வாய்ப்பு.

image

மதுரை மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

மாநகர காவல் ஆணையர் அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 22 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!