India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான இன்று பச்சை பட்டுடுத்தி மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து சித்திரை வீதியில் வீதியுலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தர்கள் தரிசித்தனர்.
திருமணமான 32 வயது நபரால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ‘சிறுமிகள் மாயம் தொடர்பான வழக்குகளில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. சிறுமிகள் கடத்தப்பட்ட புகார் வந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும், இல்லையென்றால், விசாரணை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் ” என்றனர்.
சிவகங்கை கல்வி முதன்மை அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த சரவணன் தன் தாயார் அரசு பணியில் இருந்ததை மறைத்தும் சிறுவயதில் அவர் தன்னை கைவிட்டு சென்றதாக கூறி 1989 கருணை பணி நியமனம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது பணி ஒய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்ததை அடுத்து நீதிபதி ஆர்.என் மஞ்சுளா சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை மதுரையில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மதுரையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை என்றாலே கோவில் நகரம், தூங்கா நகரம் கூடல்நகரம் என்றே அழைக்கப்படும் ஒரு சிறப்புமிக்க மாவட்டமாகும். பல்வேறு மாவட்டம், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் மதுரைக்கு சுற்றுலாவுக்காக ரயிலில் தான் வருகின்றனர். கோவில் நகரத்திற்கு மேலும் சிறப்பூட்டும் விதமாக மதுரை ரயில் நிலையம் இருப்பதால் ரூ.348 கோடியில் மதுரை ரயில் நிலையத்தை பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றது.
மதுரைக்கு தினமும் ரயில்கள் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
டூவீலரில் வரும் பயணிகள் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷனில் 3 டூவீலர் பார்க்கிங் கட்டப்பட்டு வருகிறது. கிழக்கு நுழைவாயிலில் 3 மேல் தளங்களுடன் 2929 ச.மீ., அளவில் தரைத்தளம் முதல் 4 அடுக்குகளாக அமைக்கப்பட உள்ளது. மேற்கு நுழைவாயிலில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களுடன் 2580 ச.மீ., அளவில் பார்க்கிங் கட்டப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விரகனூர் அணை பகுதியில் 3 சென்டி மீட்டரும், சித்தம்பட்டியில் 1 சென்டி மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மழைப் பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம், மிராக்கிள் ட்ரீ லைப் சயின்ஸ் சார்பில் மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவுத்தொழில் வர்த்தக மையத்தில் மே 25 முதல் 29 வரை பனை ஓலை ஓவிய கண்காட்சி மற்றும் ஓவியம் வரைவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. பாரம்பரிய பனைஓலை வடிவமைப்பு கலையை மீட்கும் வகையில் நடைபெறும் இலவச பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதியில்
அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பலகை வைப்பவர்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி அனுமதி பெற்று அனுமதி கொடுத்த இடத்தில் மட்டுமே பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும் எனவும் தனிச்சையான இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.