India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 1987ல் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கள் விற்பனைக்கு அனுமதித்து பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மனதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுநல வழக்கு என்பதால் இரு நீதிபதிகள் கொண்ட முதன்மை அமர்வின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
குரூப் 1 தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 18.06.2024 அன்று முதல் மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளதால் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் வாங்கும் கிராம நிர் வாக உதவியாளர்களுக்கு வழங்குவது போல அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்திய இராணுவத்தில் அக்னிவீர் வாயு (விமானப் படை) தேர்வில் கலந்து கொள்வதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை இணைய வழியில் பதிவு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு 18.10.24 அன்று நடைபெற உள்ளது. விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையத்தளத்தை அணுகலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை காலக் கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) ஜூன் 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த சிறப்பு ரயிலில் 11 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
9 வருடங்களாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை பதில் தர உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, பாஜக சார்பில் மாவட்டம் மற்றும் மண்டலம் அளவில் யோகா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும், சிறப்பான முறையில் வழிநடத்துவதற்கும், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாஜக மாநில பொதுச்செயலாளர், இராம.சீனிவாசன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை பாஜக தலைவர் நியமித்துள்ளார்.
கடந்த 9 வருடங்களாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மதுரை உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை மீண்டும் திறந்து கிராம மக்கள் வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி சந்திரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. விசாரணையில் கோவிலை மீண்டும் திறந்து கிராம மக்களை வழிபாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மாவட்ட SP பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மகளிருக்கான சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் நாளை(ஜூன் 13) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஜிதா சைபர் குற்றம் தவிர்ப்பு குறித்து எடுத்துரைக்க உள்ளார். இந்த முகாமில் பங்கேற்ற அனுமதி இலவசம் என்பதால் பெண்கள் பங்கேற்று பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்து, கடை, தொழில், பாதாளச் சாக்கடை, குடிநீர் வரிகள், குத்தகை வருவாய் வசூலிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 1800க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகளில் நீண்ட நாட்களாக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நிலுவை வரியை வசூலிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.