India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தேனி மாவட்ட PC பட்டி போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தேனி மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிறப்பு சான்றிதழ் வழங்க தாமதிப்பதாக மதுரை கிரேஸ் கென்னட் மழலை இல்லம் சார்பில் சாமுவேல் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில் மதுரை மாநகராட்சி எவ்விதமான காலதாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தல்லாகுளம் பகுதியில் 11 செ.மீட்டரும், திருமங்கலம், மதுரை நகரம் மற்றும் வடக்கு பகுதியில் 5 செ.மீட்டரும், விரகனூர் அணை, கள்ளிக்குடி,சித்தம்பட்டி, இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும், கள்ளந்திரியில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆரின் 18ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தல்லாகுளம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு இன்று மதுரை மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி. தி.மு.க சார்பில் பூமிநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று மர்ம நபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். அந்த நபரை காவலாளிகள் துரத்தி பிடித்து விசாரித்தபோது அவர்கள் 2 பேட்டரிகளை திருடியிருந்தது தெரியவந்தது. பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் இன்று அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுகிறது. தபால் தலை நிபுணர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் பழங்கால முதல் தற்போது வரை உள்ள ஆயிரக்கணக்கான வகையிலான அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
மதுரை மாநகர் பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரம் பலத்த கனமழை பெய்தது. இதனால் மதுரை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மதுரையில் சில நாட்களாக மழை பெய்வதால், மின்விபத்துகளை தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் கழக அறிக்கையில், பொதுமக்கள் தாங்களாக மின்சாதனப் பழுதை கையாளக்கூடாது, அறுந்து கிடக்கும் மின்கம்பி, இழுவைக் கம்பிகளை தொடக்கூடாது, மின்கம்பி தடத்தில் பந்தல், விளம்பரப் பலகை அமைக்கக் கூடாது, வீடுகளில் விபத்துகளை தவிர்க்க ‘ரெசிடியூயல் கரண்ட் டிவைஸ்’ பொருத்த வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த வெண்ணிலா 2019 முதல் ‘ஹைபர் ரியாலிஸ்டிக்’ ஓவியங்கள் வரைந்து வருகிறார். நடிகர்கள், தலைவர்கள் என 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். மணமகளின் தாலிக்கு மணமகன் குங்குமம் இடுவது போன்று வரைந்த இவரது படத்தின் ‘குளோஸ் அப்’ ஓவியத்தை ‘ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு ‘ஹிந்து திருமணம்’ என்ற பிரிவில் உலக சாதனைக்கானதாக தேர்வு செய்துள்ளது.
ஆந்திராவிலிருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று(மே 19) ஆந்திராவிலிருந்து மதுரைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. விசாரணையில், மதுரையை சேர்ந்த ஓட்டுநர் ஹருன் குமார் உதவியோடு, கன்னியாகுமரியை சேர்ந்த பென்னட், ஜீவா ஆகியோர் கஞ்சா கடத்தியது தெரியவர 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.