India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உசிலம்பட்டி அருகே அயன் மேட்டுப்பட்டி டாஸ்மாக் கடை எதிரே உள்ள புத்தூர் மலையடிவார பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத இளைஞர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும் சிந்துபட்டி போலிசார் உயிரிழந்தவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பூ மார்க்கெட் சுகாதார வசதிகளின்றி நோய் பரப்பும் தளமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசு இந்த 3 ஆண்டு சாதனையாக மதுரையின் அடையாளமாக சொல்லப்படும் கலைஞர் நூலகம் சிறு மழைக்கே தாங்காத நிலையில் உள்ளதாக மழை நீர் புகுந்த புகைப்பட ஆதாரத்தை காட்டி விமர்சித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள நாகமலை தொடரை, மதுரை இயற்கை பண்பாட்டு மையம், பறவையியல் ஆா்வலா்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டதில் கட்டுவிரியன், எண்ணெய் பனையன், ஓலைப்பாம்பு, வெள்ளிக்கோல் வரையன், கொம்பேறி மூக்கன் உள்ளிட்ட ஊா்வன உயிரினங்கள் வசிப்பது தெரிய வந்துள்ளது. எனவே, நாகமலை வனப் பகுதியை ஊா்வன சரணாலயமாக அரசு அறிவிக்க வேண்டும் என இயற்கை பண்பாட்டு மையம் அரசுக்கும், வனத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை சம்மட்டிபுரம் கோபால்(55), பரவை காய்கனி சந்தையில் முட்டைக்கோஸ் மொத்த வியாபாரம் செய்து வந்தாா். திடீரென, கடைக்கு வந்த 3 போ் கோபாலை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினா்.
இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமி(45), காளிதாஸ்(32), வீரபாண்டி(38) ஆகிய மூவரை நேற்று(மே 20) கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக மூவரும் கோபாலை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவன மதுரை மண்டல ஆணையா் அமியகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளா் மாநில ஈட்டுறுதிக் கழக அலுவலகங்கத்தில் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம் மே 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வருங்கால வைப்பு நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கும் நான் முதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மதுரையில் இதுவரை 6,714 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாணவர்களுக்கு இத்திட்டம் கல்வியில் மட்டுமல்லாமல் வாழ்விலும் வெற்றி பெற செய்யும் எனத் தெரிவித்தார்.
மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் திருநங்கையர் ஆவண மையத்தில் திருநங்கையர், திருநம்பிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 3 வகையான ஓவிய பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 வீதம் ரூ.450 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9600555097 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. 8ம் நாளான இன்று கனமழை பெய்து வருவதால் வழக்கமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் புது மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்திற்குள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சித்திரை வீதி உலாவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது. கடந்த மே 10 அன்று இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில். தற்போது தமிழ்நாடு அரசு எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.