Madurai

News June 19, 2024

நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்

image

திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் 10 நாள் நகை -ஆபரண அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் ஜூலை.2 ஆம் தேதி தொடங்குகிறது. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 – 45 வயது உள்ளவர்கள் பங்கேற்கலாம். அரசு சான்றிதழ்களுடன் உணவு, பயிற்சி உபகரணம், தங்குமிடம் இலவசம். விரும்புவோர் 94456 00561, mdu.rudset@gmail.com மூலம் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 19, 2024

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

image

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று, “வாழ்வாதாரம் இழந்துள்ள மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு, வேலை, மாற்று குடியிருப்பு வசதிகள் செய்து தரக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின், “மறுவாழ்வு கிடைக்கும் வரை தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

News June 19, 2024

ராகுலுக்கு வாழ்த்து சொன்ன செல்லூர் ராஜு

image

சமீப நாட்களாக காங்கிரஸ் கட்சிக்கும், ராகுலுக்கும் ஆதரவான கருத்துக்களை வைத்து வரும், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸை கட்டிக் காக்க ராகுல்காந்தி விடாமுயற்சி எடுத்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று செல்லூர் ராஜு வாழ்த்தினார்.

News June 19, 2024

கோவில் திருவிழா வரி வசூலில் முறைகேடு?

image

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா வரிவசூலில் முறைகேடு நடந்ததாக மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து அறநிலையத்துறை விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்குட்பட்ட இக்கோவிலில் திருவிழா நடத்த வரி வசூல் செய்யப்பட்ட நிலையில் வரி வசூல் செய்த பில் போலியானவை என குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இதனை விசாரிக்க விசாரணைக் குழுவை நியமித்து இந்து அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

News June 18, 2024

பாஜகவினர் முக்கிய ஆலோசனை

image

மதுரை மாநகர பாஜக சார்பில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகர் பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சர்வதேச யோகா தினம் மற்றும் ஷாம் பிரசாத் முகர்ஜி நினைவு நாள் அனுசரிப்பு குறித்து முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இரு வேறு நிகழ்வுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, நிகழ்ச்சிகளை முறையாக ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டது.

News June 18, 2024

ராமேஸ்வரம் – ஹுப்பாளி ரயில் சேவை நீடிப்பு

image

பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – ஹுப்பாளி – ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை ஜூன் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஆறு மாதங்களுக்கு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.

News June 18, 2024

5 நாட்களில் ரூ 1.64 லட்சம் அபராதம் வசூல்!

image

மதுரை கோட்டத்தில் வைகை, குருவாயூர், பாலக்காடு – பழனி – சென்னை, தூத்துக்குடி – மைசூர் ரயில்களில் கடந்த 5 நாட்களாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.1,64,415 வசூல் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

News June 18, 2024

மதுரை: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

News June 18, 2024

போலி டிக்கெட் பரிசோதகர் கைது..!

image

சென்னையிலிருந்து நாகர்கோவில் வரும் அந்தோதயா சிறப்பு விரைவு ரயிலில் நேற்று திருச்சியில் டிக்கெட் பரிசோதகர் எனக் கூறி ஒருவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு டிக்கெட் பரிசோதகர் சரவணா செல்வி நடத்திய விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் போலியான அடையாள அட்டையை வைத்து டிக்கெட் பரிசோதகர் என வலம் வந்தது தெரியவந்தது. பின்னர் மதுரை ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.

News June 18, 2024

தேர்தலை கண்டு அதிமுக அஞ்சாது-செல்லூர் ராஜூ

image

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெற்றது உண்மையான வெற்றி அல்ல, மக்களை விலை பேசி வாங்கப்பட்ட வெற்றி என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் திமுக புதுப்புது உத்திகளை பயன்படுத்துவதாகவும், ஜனநாயகத்தை தேர்தல் ஆணையமும் காப்பாற்றாது என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை, அதிமுக தேர்தலை கண்டு அஞ்சாது என்றார்.

error: Content is protected !!