India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நேற்று(26.05.2024) மா மதுரைக் கவிஞர் பேரவை சார்பில் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. செயலர் கவிஞர் இரா.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைவர் இரா.வரதராஜன் எழுதிய சரித்திர நாயகர்கள் கவிதை நூலை வெளியிட்டனர். முனைவர் ஸ்ரீ வித்யா பாரதி த.மு.எ.க.ச செயலர் ஜி.பாலசுப்ரமணியன், பறம்பு நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை, விமான நிலைய இயக்குநர் பி.முத்துக்குமார் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) உத்தரவின்படி, மதுரை விமான நிலையத்தில் ‘தானியங்கி வாகன பார்க்கிங் மேலாண்மை முறை’ மற்றும் புதிய வாகனங்கள் நிறுத்தும் கட்டணம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி 80 மற்றும் 81 வது வார்டு பகுதியை உள்ளடக்கிய ஜெய்ஹிந்து புரம், நேதாஜி தெருவில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு மூன்று நாட்களாக வெளியேறி வீதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மேலும் துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக வேதனையில் தவித்து வருகின்றனர்.
திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக குருவாயூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று காலை மதுரை வந்தடைந்து. மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி புறப்பட்டு சென்றது. திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் கடைசி பெட்டியில் புகை வருவதை கண்டு உடனடியாக கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.விரைந்து தீயை அணைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்ய மத அடிப்படையில் உரிமை உண்டு என்று ஜி.ஆர் சாமிநாதன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
மதுரை, சிக்கந்தா்சாவடியில் உள்ள வேளாண் உணவுத் தொழில் வா்த்தக மையத்தில் “பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி”, விற்பனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆன்மிகம், இயற்கை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய பனை ஓலையில் தீட்டப்பட்ட சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.
இக்கண்காட்சி வருகிற புதன்கிழமை (மே.29) வரை நடைபெறுகிறது.
மதுரையில் நேற்று ஒரே நாளில் 9 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களாக மதுரையில் மழை தொடர்வதால் வைரஸ் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்தது. நேற்று 9 பேர் உட்பட மொத்தம் 39 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மதுரை நகர் பாஜக தலைவர் மகாசுசீந்திரன் இன்று கூறியது,”சமீபத்தில் இறந்த நிர்வாகி குடும்பத்திற்கு, உதவி செய்த நிர்வாகி ஒருவர்,கட்சி உதவவில்லை என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதனால் எதிர்க்கட்சியினர் விமர்சிக்க துவங்கினர்.நிர்வாகிகள் குறைகளை தலைமையிடம் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, தன்னிச்சையாக செயல்படக் கூடாது.எனவே அக்கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் சார்பில் 2024-2025ம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் படிக்க பழங்குடியின மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் இணையவழியில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
திருவள்ளுவா் தின அழைப்பிதழில் காவி நிறத்தில் திருவள்ளுவா் படத்தை வெளியிட்ட தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக, மதுரையில் நேற்று(மே 24) ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளுவா் சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ் தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞா் முன்னணி, திராவிடா் விடுதலைக் கழகம், தந்தை பெரியாா் திராவிடா் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சோ்ந்தோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.