India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை சத்ய சாய் நகரை சேர்ந்த என்.ஜி.மோகன் கடந்த 2019ல் தேனி மாவட்டம் போடி தாலுகா அலுவலகத்திற்கு மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். 1550 நாட்களாக பதில் அளிக்காததால் சென்னை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையம் வட்டாட்சியருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.
மதுரை ஆண்டாள்புரம் வெங்கடேஸ்வரன்(50). அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியராக உள்ளார். நேற்று கல்லூரிக்கு சென்ற இவரை வழிமறித்த 4 பேர் கடுமையாக தாக்கியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணையில் வெங்கடேஸ்வரன் சகோதரரான திருச்சி மின்அமலாக்கத்துறை அதிகாரி கொண்டல்ராஜ் மகனுடைய விவாகரத்து வழக்கில் சகோதரர் தரப்பிற்கு ஆதவராக இருந்ததால் எதிர் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக மக்கள் அதிகாரிகளிடம் வழங்கும் மனுவின் மீது உரிய முடிவை எடுக்காமல், காரணமின்றி நிலுவையில் வைப்பது அதிகாரிகளின் கடமை மீறிய செயல் என மதுரை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. மதுரை ஏஏ சாலையில் உள்ள புதிய டாஸ்மாக் கடையால் மக்கள் பாதிக்கப்படுவதால் அதை மூட கோரி தாக்கல் செய்த மனுவில் நேற்று மாவட்ட ஆட்சியர், கலால் ஆணையர் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
மதுரையில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியின் கீழ் எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பெட்கிராட் நிறுவனத்தில் மகளிருக்கான 3 மாத கால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8வது தேர்ச்சி பெற்ற 45 வயது வரையுள்ள ஏழைப்பெண்கள் பங்கேற்கலாம். சிறுபான்மை, எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் நேரிலோ அல்லது 89030 03090ல் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரை வருகிறார். இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மீனாட்சி கோயில் பகுதிகள் மற்றும் அவர் தங்குமிடம், பயணிக்கும் சாலைப்பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்த குமார் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் குழு கல்லுாரி கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையில் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின்னர் இக்குழு செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது
மதுரை அரசு மியூசிய வளாகத்தில் கூடல் கலைக்கூடம் சார்பில் வரும் ஜூன் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை இலவச பறை இசை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் 30 பேர் பங்கேற்கலாம் என்பதால் முன்பதிவு கட்டாயம் எனவும், ஆர்வம் உள்ளவர்கள் 94434 54446 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலை கல்லூரியில்(தன்னாட்சி) 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றன. இதில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நாளை(மே 29) காலை 9 மணிக்கு கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் சேர்க்கை குறித்த தகவல்கள் கல்லூரி இணையதளமான www.smgac.org-ல் பதிவேற்றம் செய்யப்படும் என கல்லூரி முதல்வர் வானதி தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் கமிஷன் அடிப்படையில்(3%), முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் விற்பனை செய்யும் ‘விற்பனை உதவியாளர்’ பணிக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் ஜூன் 11க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மதுரையை மையமாக கொண்ட ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்ததாக வாடிக்கையாளர்களின் புகாரில் அதன் இயக்குநர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்டம், போடி பகுதியில் செயல்பட்ட ‘நியோ மேக்ஸ்’ நிறுவன முக்கிய நபராக இருந்த பாபு ராமநாதன்(57), முகவராக பணிபுரிந்த அவரது மகன் தனுஷ்(28) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.