India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை நகைக்கடை பஜாரில் இயற்கை ஆர்வலர்கள் இணைந்து வரும் 2ம் தேதி மரக்கன்றுகள் நடவு செய்யும் திருவிழா நடத்த உள்ளனர். இந்த விழாவிற்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமாரை தலைமையேற்று தொடக்கி வைக்க இன்று நேரில் அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்வில் மு. ரா.பாரதி, செந்தூர் பாண்டியன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் தி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 74-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மதுரை மேற்குக் கோபுரத் தெருவில் உள்ள அந்த நிறுவனத்தின் புத்தக விற்பனைக் கூடத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
உசிலம்பட்டி, விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் ரவிராஜன் மகள் சசிகா(10). 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று(மே 30) இச்சிறுமி துப்பட்டாவை, சாய்த்து வைத்திருந்த கட்டிலில் கட்டி விளையாடிகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கழுத்தில் துப்பட்டா சுற்றி இறுக்கவே, மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனை கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த 52 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 41 கிலோ கருப்பை கட்டியை மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழு, 40 செ.மீ.,க்கு 32 செ.மீ., அளவுள்ள பெரிய கருப்பை கட்டி இருந்ததால் கவனமாக மதிப்பீடு செய்து அறுவை சிகிச்சை செய்ததாகவும், நோயாளிக்கு அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது என்றனர்.
மதுரையில் கடந்த வாரம் கனமழை பெய்து மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை மாநகர் மற்றும் மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
மதுரை தத்தனேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் கனகவேல் (80). இவர் நேற்று தத்தனேரி பிரதான சாலையில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டம் வழியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்தியவரை போலீசார் தேடுகின்றனர்.
நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவியுள்ளது’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற காவல்துறை அதிகாரியின் மனைவி தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையில், ஊழல் வீட்டிலிருந்தே துவங்குவதாக கருத்து தெரிவித்து மனுதாரர் தவறான முறையில் பெற்ற பணத்தில் வாழ்ந்துள்ளார். இதனால் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து தங்களது வாழ்நாள் சான்று பெற்று 15.06.2024க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு 0452-2529695ல் தொடர்பு கொள்ளலாம்.
மேலூர் அருகே கருங்காலக்குடி பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருங்காலக்குடி சார்பதிவாளர் அருள்முருகனிடம் இருந்து ரூ.1.85,700 லஞ்சம் பெற்றதாக கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அருள் முருகன் கைது செய்யப்பட்டார். மேலும் தற்காலிக பணியாளர்கள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக காரை ஓட்டிய புகாரில் டிடிஎஃப் வாசன் நேற்று கைது செய்யப்பட்டார். டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.