India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெளிநாட்டுக் கல்வியை கணினி மூலம் வழங்கும் திட்டம் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக
பொது நுாலக இயக்குநர் இளம்பகவத் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்
இளைஞர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் புத்தகங்களை படிக்கும் இடமாக மட்டுமின்றி திறன்களை வளர்க்கும் இடமாகவும் மாறி வருகிறது என்றார்.
மலேசியா சிலம்ப கழகம், இன்டர்நேஷனல் சிலம்பம் பெடரேஷன் சார்பில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
மதுரை மங்கையர்க்கரசி பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன், 7 முதல் 9 வயது ஆடவர் பிரிவு தனித்திறமை போட்டியில் கார்த்திகேயன் வெண்கல பதக்கம், ஒற்றை அலங்கார சுற்றுப் போட்டியிலும் வெண்கலம் வென்றார்.
மாணவரை தாசில்தார் மீனாட்சி, கவுன்சிலர் பாமா, ஸ்ரீமாருதி சிலம்பப் பள்ளி பயிற்சியாளர் பாராட்டினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன்.12ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உற்சவம் நடைபெறும் நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேத்தியில் இருந்து புறப்பாடாகி, சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் அருளிய திருப்பொன்னூஞ்சல் ஓதப்படும்.
வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்.4ஆம் தேதி மதுபானகடைகள் செயல்பட கூடாது என மதுரை ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மதுக்கூடங்கள், மதுபான பார்கள் ஆகியவை காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படகூடாது எனவும், மதுபானங்கள் விற்பனை செய்தாலோ,வேறு இடங்களுக்கு கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரடிக்கல் ஊராட்சி பெருமாள் பட்டியைச் சேர்ந்த பெருமாள்- உமா தம்பதியினர் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மகளுடன் தாய் உமா செல்போனில் பேசியதை கண்டித்து பெருமாள் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றியவர்களுக்கு , 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன.
https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் அறிவித்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 4-க்கான எழுத்துத் தோ்வு வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 1,07,724 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 393 மையங்களில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் தண்ணீர், மின்சாரம், விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கையில் சிக்கியவர்களை வீரத்துடன் செயல்பட்டு காப்பாற்றியவருக்கு மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகிறது. விருதுபெற தகுதியுள்ளவர்கள் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பம்’ என குறிப்பிட்டு விண்ணப்பத்தை ஜூன் 20க்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு அனுப்பலாம் என அறிவிப்பு
மதுரை அனுப்பானடி பாபு நகரை சேர்ந்தவர் திலகவதி(62). இவர் நேற்று காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி திலகவதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்று மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தமிழகத்தில் வருகிற ஜூன் 9ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 6244 காலிப் பணியிடங்களுக்கான “குரூப் 4 ” தேர்வு நடைபெற உள்ளது.மதுரையில் குரூப் 4 தேர்வு நடைபெறும் நாளில், தேர்வில் பங்கேற்போர் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு, மதுரை ஆட்சியர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.