India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களைச் சேர்ந்த 70 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தென் மண்டல ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், பணி மாறுதல் வேண்டி காவல் ஆய்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி மதுரையில், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்கள் என 42 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் இன்று (ஜூலை 2) பல்வேறு இடங்களில் மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆனையூர், அனுப்பானடி, எல்லிஸ் நகர், இலந்தைக்குளம், தெப்பம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், இந்த நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இன்று மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர்களை திருத்தம் செய்ததை உடனே நிறுத்தி வைத்திக் கோரியும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சிய சட்டம் (IEA) முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை வடமொழி தலைப்புகளில் மாற்றியதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
அயோத்தியை 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக மீண்டும் மீண்டும் சொல்லி வந்தது மதவெறி அரசியல் குறியீடு என எம்.பி. வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அயோத்தியில் 1,000 ஆண்டு இருளை நீக்கி விட்டதாக கூறிய பிரதமர் மோடி, தேர்தலுக்கு பிறகான உரையில் அயோத்தி என்ற வார்த்தையை பேசவில்லை. எனவே, வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பாஜக கை கழுவி விடும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் சேர வேண்டும் என்பதற்காக சிலர் மிகப்பெரிய முயற்சி எடுப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். மதுரை அவனியாபுரத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், “இதுவரை தனியாக நின்று நான் தோற்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம், இன்றைக்கு விஜய்க்கு உள் அர்த்தத்துடன் பாராட்டுக்கள் தெரிவிப்பதும், , கூட்டணி குறித்து பேசுதுமாக இருக்கிறார்கள்” என சீமானை மறைமுகமாக விமர்சித்தார்.
செப்.17ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால்தான் இதனை தடுக்க முடியும். முழு ஒழிப்பு மாநாடு பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விஏஓக்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருமங்கலம் வருவாய் கோட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி ஆகிய 3 தாலுகாக்களில் விஏஓக்களுக்கு பணியிடை மாறுதல் கலந்தாய்வு திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. அதில் 3 தாலுக்காக்களை சேர்ந்த 24 விஏஓக்கள் பணியிட மாறுதல் பெற்றனர்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிா் காக்கும் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் தொடங்கப்படும் என நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் இந்த நவீன சிகிச்சைகளை எளிதாக பெற முடியும் என மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தர்மராஜ் நம்பிக்கை தெரிவிதுள்ளார் .
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிா் காக்கும் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் தொடங்கப்படும் என நேற்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் இந்த நவீன சிகிச்சைகளை எளிதாக பெற முடியும் என மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தர்மராஜ் நம்பிக்கை தெரிவிதுள்ளார் .
Sorry, no posts matched your criteria.