India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 12 சுற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. முதல் சுற்றில் இருந்து தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. வேட்பாளர் சு. வெங்கடேசன் கூறியதாவது: 2 லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம். மீடியாக்கள் சொன்ன உண்மையை, இன்றைக்கு வாக்காளர்கள் தவிர்த்துள்ளார்கள் என்றார்.
மதுரை மருத்துவ கல்லூரியில் மதுரை மத்திய மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளது. இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெளியில் வந்த திமுக முகவர்கள், முதல்வர் ஸ்டாலின் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். அவர்களை பின் தொடர்ந்து வந்த அதிமுகவினர், பதிலுக்கு எடப்பாடியார் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 9வது சுற்றில் ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார் வெங்கடேசன். மதுரை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 9வது சுற்று வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 21900 வாக்குகள், அதிமுக 11228 வாக்குகள், பாரதிய ஜனதா 11278 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 5110 வாக்குகள்.
மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அதிமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் புகார் மனு அளித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக குற்றச்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சரவணன், மதுரை பாராளுமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 23,554 வாக்குகள், அதிமுக 12,082 வாக்குகள், பாரதிய ஜனதா 12,677 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 4,862 வாக்குகள் பெற்றுள்ளது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22446 வாக்குகள், அதிமுக 11062 வாக்குகள், பாரதிய ஜனதா 10182 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 4726 வாக்குகள் பெற்றுள்ளது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24,373 வாக்குகள், அதிமுக 14,891 வாக்குகள், பாரதிய ஜனதா 8,644 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 6,186 வாக்குகள் பெற்றுள்ளது.
மதுரை தொகுதியில் தபால் வாக்கு மற்றும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சிபிஎம் வெங்கடேசன் முன்னிலை வகித்து வருகிறார். அதேபோன்று திருப்பூர், நாகை தொகுதியில் சிபிஎம் கட்சியினர் முன்னிலை வகித்து வருகின்றனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சு. வெங்கடேசன் முன்னிலை வகித்து வருகிறார்.
மதுரை மக்களவை தொகுதியின் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
8 மேஜைகளில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 6590 வாக்குகள் எண்ணப்படும் நிலையில் முதலில் எண்ணப்பட்ட 80 க்கும் மேற்பட்ட வாக்குகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 38, அதிமுக சரவணன் 20 வாக்குகளும், பாஜக சீனிவாசன் 15 வாக்குகள் பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சு.வெங்கடேசன் முன்னிலை பெற்றுள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.