India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி பைசாபாத் தொகுதியின் ‘வெற்றியே’ இந்தியா சொல்லும் செய்தி
பொதுத் தொகுதியில் நின்ற சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் . மதவெறி அரசியலின் அடையாளமாக்கப்பட்ட அயோத்தி சமத்துவத்தின் அடையாளமாக ஒளிர்கிறது.
அன்பே வெல்லும் என
சு.வெங்கடேசன் ட்வீட் என இன்று செய்துள்ளார்.
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் தேனியில் கைதான போது கஞ்சா வைத்திருந்ததாக தேனி PC பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கில் இன்று சவுக்கு சங்கர் சென்னை சிறையிலிருந்து மதுரை மாவட்ட NDPS நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் இன்று ஆஜரானார். அதைதொடர்ந்து, ஜூன் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் – 4,30,323 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் – 2,20,914 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் P.சரவணன் – 2,04,804 வாக்குகள்
*நாதக வேட்பாளர் மோ.சத்யாதேவி – 92,879 வாக்குகள்
“மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டது திமுகவால் அல்ல, அக்கட்சியின் துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது” என்று, முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், மதுரையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேலும், ” அதிமுகவில் ஒவ்வொரு பதவியையும் அனுபவித்துவிட்டு , கட்சிக்கு எதிராகச் சென்று விட்டார்” என்று ஓபிஎஸ்ஸை கடுமையாக உதயகுமார் விமர்சித்தார்.
மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், ” முக்கனி உற்ஸவம் ” ஜூன் 21ல் நடக்கிறது.
ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்று மாலை 6:15 முதல் இரவு 7:00 மணிக்குள் கோயிலின் ஆஸ்தான மண்டபத்தில் முக்கனி உற்ஸவம் நடக்கிறது.
தலைமை பட்டர் அம்பி கூறுகையில், ”ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமி நாளன்று பெருமாள், தாயாருக்கு மா, பலா, வாழை என முக்கனிகளால் நைவேத்யம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெறும்” என்றார்.
மதுரை தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் 4,29,581 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 2,20,786 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார். அதிமுக சரவணன் 2,04,652 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். தேர்தல் அதிகாரி கலெக்டர் சங்கீதாவிடம் வெற்றி சான்றுகளை வேட்பாளர் வெங்கடேசன் பெற்றார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று முடிவடைந்தது. இறுதி சுற்றாக 25வது சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 626 வாக்குகள், அதிமுக 306 வாக்குகள், பாரதிய ஜனதா 209 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 162 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 16 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் எண்ணப்பட வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை விட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் சு.வெங்கடேசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 சுற்று முடிவில் சு.வெங்கடேசன் 1லட்சத்தி 76ஆயிரத்தி 536 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 16வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 14,169 வாக்குகள் அதிமுகவை விட பாஜக கூடுதலாக பெற்று 2ம் இடத்தை பிடித்தது. 16வது சுற்று முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3,61,287 வாக்குகள், அதிமுக 1,84,751 வாக்குகள், பாரதிய ஜனதா 1,70,582 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 77106 வாக்குகள் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.