India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் விடுபட்ட வார்டுகளில் ரூ.520கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், இதற்கான டெண்டர் விடப்பட்டு உரிமை கோரும் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை மக்களவை தொகுதியில் 4,28,204 வாக்குகள் பெற்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றியை பெற்றுள்ளார். அவருக்கு பின் 2வது இடத்தை 2,18,705 வாக்குகள் பெற்று பாஜகவின் ராம ஸ்ரீனிவாசன் பிடித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சரவணன் 2,03,891 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதிமுக 3 இடத்திற்கு தள்ளப்பட அதிமுகவில் உட்கட்சி பூசல் முக்கிய காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மதுரையில் ஜூன் 9ல் தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநாட்டின் ஆலோசகா் கவிஞா் மு.முருகேஷ், ஒருங்கிணைப்பாளா் இனிய நந்தவனம் இதழாசிரியா் கவிஞா் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைக்கூ கவிதைப் பற்றிய தெளிவையும் புரிதலையும் உண்டாக்கும் வகையில் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் கவிக்கோ அரங்கில் நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவிலான கவிஞர்கள் வருகின்றனர்
மதுரையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 162 மாணவர்கள் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக அரசு நடத்திய நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
2023ல் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 192 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரையில் உள்ள பாதுகாப்புக் கிடங்கிற்கு நேற்று கொண்டு வரப்பட்டன. 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக 2,751 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, 3,303 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,574ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது
மதுரை செல்லூர் தியாகி பாலு 2வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(66). இவர் நேற்று அயன்பாப்பாகுடியில் ஆரம்ப பள்ளி ஒன்றில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது சாரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம்(40). திருப்பாலையில் பள்ளி ஒன்றில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
மதுரை மாவட்டத்தில், வரும் சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது 2024 வழங்கப்பட உள்ளது. விருது பெறுவதற்கு தகுதிகளையுடைய நபர்கள் தமிழக அரசின் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து. விண்ணப்பங்களை வரும் 20.06.2024 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை சரவணா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர். பா.சரவணனின் தாயார் பா.அங்கம்மாள் இன்று மாலை இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் நாளை மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மருதுபாண்டியர் நகரில் நடைபெறும். அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் டாக்டர் சரவணனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 21 போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேசன் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் பாஜகவும், 3வது இடத்தில் அதிமுகவும், 4வது இடத்தில் நாம் தமிழர் கட்சியும் வாக்குகள் பெற்றனர். இதில் நோட்டாவிற்கு 11,174 வாக்குகள் பதிவாகின. இதில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை 11 வேட்பாளர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையத்தில் வாகன கட்டணம் அதிகரித்து உள்ளதால் வாகனம் ஓட்டுநர்களுக்கும், ஊழியர்களுக்கும், வாக்கு வாதம் ஏற்பட்டது. வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் ஜூன்.1 ஆம் தேதி முதல் மும்பை சேர்ந்த தனியார் நிறுவனம் வாகன கட்டணம் வசூல் செய்கிறது. வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.