Madurai

News July 7, 2024

மதங்களோடு ஒப்பிடக்கூடாது: அமர்நாத்

image

அகழாய்வில் கண்டெடுக்கப்படும் சுடுமண் சிற்பங்களை மதங்களோடு ஒப்பிடக்கூடாது என தொல்லியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெறும் சுடுமண் சிற்பங்களை, சிறுவர்கள் விளையாட பயன்படுத்தியிருக்கலாம் என்பதால் அதை எந்தவித மதத்துடன் ஒப்பிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.

News July 7, 2024

‘நம்மாழ்வார் விருது’ பெற அழைப்பு

image

சிறந்த உயிர்ம விவசாயியிக்கான ‘நம்மாழ்வார் விருது’ வழங்கப்பட உள்ளதாக மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜ் அறிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்திருக்க வேண்டும். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயி அக்ரிஸ்நெட் வலைதளத்தில் 2024 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

அணி மாறினாரா டாக்டர் சரவணன்..?

image

மதுரை மக்களவை தேர்தலில் மதுரை மாநகர செயலாளர் செல்லூர் ராஜுவுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தேர்தல் தோல்விக்கு பின் செல்லூர் ராஜுவுடனான நெருக்கத்தை தவிர்த்து அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று மேற்கு மாவட்ட செயலாளரான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்ற நிகழ்வில் சரவணன் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது. 

News July 6, 2024

ஆவின் பால் விலை அதிரடியாக குறைப்பு

image

மதுரை ஆவின் நிறுவனத்தில் அதீத உயா் வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் பாலின் விலை ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆவின் பொது மேலாளா் சிவகாமி நேற்று தெரிவித்துள்ளார். மி.லி. பால் ரூ.30இல் இருந்து ரூ.28க்கும், 150 மி.லி. பால் ரூ.12இல் இருந்து ரூ.10க்கும் விற்கப்படுகிறது. இந்தத் தள்ளுபடி விலைகள் டிசம்பா் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News July 6, 2024

அதிமுக தொண்டர்களை சீண்டிப் பார்க்க வேண்டாம்

image

அதிமுக தொண்டர்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தயாராக இருப்பதாகவும், அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என தெரியவில்லை எனவும் கூறினார்.

News July 6, 2024

மதுரை எம்.பி. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

image

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, நேற்று அனைத்து மக்கள் நீதிக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பேசிய திருமாறன், “தமிழனை தலை நிமிர செய்த செங்கோலை, தலை குனிவு அடையச் செய்த மதுரை எம்.பி. வெங்கடேசன் ஆன்மீக பெரியோர்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.

News July 6, 2024

மதுரை வேட்பாளர்கள் செய்த செலவு தெரியுமா?

image

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.90 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் அனுமதித்திருந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ரூ.76 லட்சத்து 25 ஆயிரமும், பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் ரூ.51 லட்சத்து 86 ஆயிரமும், கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசன் ரூ.47 லட்சத்து 99 ஆயிரமும் செலவு செய்துள்ளனர்.

News July 6, 2024

மதுரை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

image

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலப் பணி தொடங்கியதால், மாற்றுப் பாதையாக வைகை தென்கரை, வடகரை சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால், வைகை தென்கரை, வடகரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்று காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி நிறுத்தும் வாகனங்களுக்கு பூட்டு போட்டு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் அதிரடியாக இறங்கியுள்ளனர்.

News July 6, 2024

ஆங்கில தேர்வில் 36 பேர் ஆப்சென்ட்

image

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுதாத மாணவர்களுக்கான துணை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கில பாடத்திற்கான தேர்வு, மதுரை மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 331 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் நேற்று 295 பேர் மட்டுமே எழுதினர். இதன்படி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 36 பேர் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2024

காமராஜர் பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியானது

image

காமராஜர் பல்கலை இணைப்பு கல்லுாரிகளின் இறுதியாண்டு மாணவர்களின் (2024 ஏப்ரல்) தேர்வு முடிவுகள், பல்கலை இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் கூறியுள்ளார். எனவே, மாணவர்கள் இணையதளம் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும், முதல் இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!