Madurai

News July 9, 2024

காமராஜர் பல்கலை.,யில் யு.ஜி. படிப்பு நிறுத்தம்

image

மதுரை காமராஜ் பல்கலைக்கழத்தில், நேரடி இளங்கலை படிப்புகள் (யு.ஜி.) முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், யு.ஜி., படிப்புகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த 1,642 மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இங்கு விண்ணப்பித்த மாணவர்கள், மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி பிரச்னை காரணமாக இந்த மாற்றம் கொண்டுவததாகக் கூறப்படுகிறது.

News July 8, 2024

இசைக்கல்லூரி பயிற்சி வகுப்புகள் 

image

மதுரை அரசு இசைக்கல்லூரியில் ஜூலை 12ஆம் தேதி முதல் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி துவங்க உள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதற்கு 17வயது முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.500 கட்டணத்தில் தமிழர் பாரம்பரிய கலையான இசை, நாடகம், கரகாட்டம், மரக்காலாட்டம் மற்றும் பறையாட்டம் ஆகிய கலைகள் கற்றுக்கொடுக்கப்படும். மேலும், விவரங்களுக்கு  95667-18704 என்ற எண்ணை அழைக்கலாம்.

News July 8, 2024

மதுரை: நாளை முதல் 50% கட்டணம் செலுத்த வேண்டும்

image

திருமங்கலம் – கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை (ஜூலை 9) நள்ளிரவு 12 மணி முதல் உள்ளூர் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி அமலுக்கு வரவுள்ளது. இதுவரை கட்டமின்றி சென்று வந்த உள்ளூர் வாகனங்கள், நாளை முதல் 50% கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு எதிராக, பல்வேறு போராட்டங்களை மக்கள் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

News July 8, 2024

பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி!

image

மதுரை தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 2024-25ஆம் கல்வி ஆண்டின்படி ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு கையடக்க கணினி (TABLET) வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2,855 கையடக்க கணினிகளை ஆட்சியர் வழங்கினார். இதன் மூலம், மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பிக்க முடியும்.

News July 8, 2024

குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள்

image

மதுரை மாவட்டத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிறார்கள் ஈடுபடும் குற்றங்கள் 40க்கும் மேல் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக, 50 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. கொலை வழக்குகளில் பெரும்பாலும் சிறார்கள் தொடர்புடையவர்களாக உள்ளதால், அதை தடுக்க காவல்துறை கவனம் செலுத்துகிறது.

News July 8, 2024

கோவில்களில் கட்டண தீண்டாமை: பகீர் குற்றச்சாட்டு

image

பொருளாதார ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் கட்டண தீண்டாமை பக்தர்களுக்கிடையே வேறுபாட்டை உருவாக்கியுள்ளது என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் மதுரை சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார். “தரிசன கட்டணமுறை சமூகநீதி கோட்பாட்டிற்கும், இந்து ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தமிழக அரசு தரிசனக் கட்டண முறையை படிப்படியாக குறைத்து கோயில்களில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

News July 8, 2024

படியில் பயணித்த 41 பேர் உயிரிழப்பு

image

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் விபத்து குறித்து 39 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 23 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர். 2023ஆம் ஆண்டில் மட்டும் படியில் பயணித்த 41 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்ததாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானவா்களில் 87% பேர் 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் எனவும், 13%பேர் பெண்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2024

விரைவில் தொடங்கும் மெட்ரோ திட்டம்

image

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று விரைவில் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான 936 பக்கங்கள் கொண்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே வழங்கி உள்ளது. இதனால், மதுரையில் மெட்ரோ பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவித்தனர்.

News July 7, 2024

மதுரையில் வெளுத்து வாங்கிய வெயில்

image

மதுரையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் இன்றும் மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரை நகரம் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

News July 7, 2024

ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: இபிஎஸ்

image

மதுரை விமான நிலையத்தில் இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவிற்கு விசுவாசமாக ஓபிஎஸ் இருந்த வரலாறு கிடையாது. கட்சி பொதுக்குழு எடுத்த முடிவால் அவரை மீண்டும் இணைக்க முடியாது. 1 சதவீதம் கூட அவரை சேர்க்க வாய்ப்பு இல்லை என்றார். 

error: Content is protected !!