Madurai

News July 10, 2024

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற 13.07.2024 அன்று குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு/மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

1.58 கோடி குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமை

image

கடந்த 2016இல் கஞ்சா கடத்திய வழக்கில் கணேசன் என்பவருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நாட்டில் 10 முதல் 17 வயது வரையுள்ள 1.58 கோடி குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

News July 10, 2024

APPLY NOW: காலி ஆசிரியர்ப் பணியிடங்கள் 

image

மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்
நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் (தமிழ் & ஆங்கிலம்) காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளது. எனவே, தகுதி உடையவர்கள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வரும் 12ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 9, 2024

போராட்ட களத்தில் குதிக்க தயார்: ஆர்.பி.உதயகுமார்

image

திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் இன்று வணிகர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேர்தல் பிரச்சாரத்தில் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகளாகியும் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டினார். மேலும், டோல்கேட் விவகாரத்தில் மக்களுக்காக களம் இறங்கி போராடுவோம் என்றார்.

News July 9, 2024

மதுரை: ஐஜி அதிரடி மாற்றம்

image

மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தென் மண்டல காவல்துறை தலைவராக தற்போது சென்னையின் கூடுதல் ஆணையராக பணியற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2021 காலகட்டத்தில் மதுரையில் காவல் ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 9, 2024

பைக் சாகசமா? உடனே இதை செய்யுங்க

image

மதுரை மாநகரில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வண்ணம் இருசக்கர வாகனத்தில் சாகசம் (Bike Racing, Rash Driving, Wheeling) ஈடுபடுபவர்களை கண்டால் அந்த இருசக்கர வாகனத்தை வாகன எண்ணுடன் Photo அல்லது Video எடுத்து 88000-21100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மாநகர் காவல் துறை தெரிவித்துள்ளனர். மேலும் சாகசத்தில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2024

மன்னிப்பு கடிதம் கேட்க இபிஎஸ் யார்? – ஓபிஎஸ்

image

நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு இபிஎஸ் யார் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி போன்று நான் சர்வாதிகாரமாகவும், தெனாவட்டாகவும் பேச மாட்டேன். அவர் பொதுச் செயலாளராக நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. நான் எந்தக் காலத்திலும் இபிஎஸ்-யிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை” என்றார்.

News July 9, 2024

ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை

image

முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி உதயகுமார், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளுக்கு முதலுதவி அறை கட்டி தர வேண்டும் என்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதற்கு உரிய உத்தரவை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News July 9, 2024

மதுரையில் வரி வசூல் அதிகரிப்பு

image

மதுரை மாநகராட்சி புதிய கட்டடங்களுக்கு, 30 நாட்களில் வரி நிர்ணயம் செய்து வசூலிக்கும் பணியை துரிதப்படுத்த உதவி வருவாய் அலுவலர், பில் கலெக்டர்களுக்கு ஆணையர் தினேஷ் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, ஏப்ரல் முதல் தற்போது வரை வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டதால், மாநகராட்சியின் ஆண்டு சொத்து வருவாய் 3 மாதங்களில் ரூ.6 கோடியாக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 9, 2024

காமராஜர் பல்கலை.,யில் யு.ஜி. படிப்பு நிறுத்தம்

image

மதுரை காமராஜ் பல்கலைக்கழத்தில், நேரடி இளங்கலை படிப்புகள் (யு.ஜி.) முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், யு.ஜி., படிப்புகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த 1,642 மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இங்கு விண்ணப்பித்த மாணவர்கள், மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி பிரச்னை காரணமாக இந்த மாற்றம் கொண்டுவததாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!