Madurai

News June 11, 2024

நுகர்வோர் நீதிமன்ற வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

image

மதுரையைச் சேர்ந்த காஜா மைதீன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், “மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் தீர்ப்பாய உறுப்பினர்களை நியமனம்” செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இன்று, வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், “மாநில நுகர்வோர் பிரச்சனை தீர்வு ஆணையத்தின் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது”.

News June 11, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை-30 ஆண்டுகள் சிறை

image

மதுரையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் செல்வக்குமார் என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது தாய் அளித்த புகாரில் செல்வகுமார் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் செல்வகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறையுடன் ரூ.30,000 அபராதம் விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

News June 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா கைபேசி

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11-6-2024) மாற்றுதிறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா கைபேசிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா வழங்கினார். மேலும் தகுதி வாய்ந்த ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக விலையில்லா கைப்பேசிகளை பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News June 11, 2024

தமுக்கம் மாநாட்டு மைய அரங்க ஆன்லைன் மூலம் முன்பதிவு

image

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையம் அரங்கத்தை இணைய வழி மூலம் முன் பதிவு செய்வதற்கான சேவையினை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார், ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

வெறிநாய் அச்சத்தை போக்குக-ஆர். பி. உதயகுமார்

image

திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியில் வெறிநாய் கடித்து 12 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறிநாய் நடமாட்டத்தால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் திருமங்கலம் தொகுதியில் சுற்றிதிரியும் வெறிநாய்களை பிடிக்க நகராட்சி, ஊராட்சிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி மக்களின் அச்சத்தை போக்க திருமங்கலம் எம்.எல்.ஏ ஆர். பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

News June 11, 2024

விருது பெற்ற மதுரை மருத்துவர்கள்

image

சென்னையில் டைனர்ஜிக் பிசினஸ் சொல்யூஷன் சார்பில் நேற்று நடந்த ‘கோல்டன் எய்ம் கான்பரன்ஸ்’ விழாவில் மதுரையைச் சேர்ந்த 3 டாக்டர்களுக்கு ஆற்றல்சார் விருதுகள் வழங்கப்பட்டன. வடமலையான் மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் பிரேம் ஆனந்த், மீனாட்சி மிஷன் ரேடியேஷன் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ணகுமார், ஆசீர்வாதம் மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெபசிங் ஆகியோர் விருது பெற்றனர்

News June 11, 2024

நாளை முதல் ஆதார் திருத்த சிறப்பு முகாம்!

image

மதுரை மாநகராட்சி 78 வது வார்டு கோவலன் நகரில் 78 வது வார்டு மற்றும் ஆதார் சேவா கேந்திரா இணைந்து நடத்தும் சிறப்பு ஆதார் முகாம் நாளை 12.06.2024 முதல் 16.06.2024 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே புதிய ஆதார் பதிவு, பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி திருத்தம், கைபேசி எண் திருத்தம் ஆகிய சேவைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

12ம் தேதி முதல் 2 வாரம் ஜமாபந்தி முகாம்

image

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் வரும் 12.06.2024 முதல் 25.06.2024 வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா இன்று அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வெவ்வேறு நாட்களில் முகாம் நடைபெறுகிறது. எனவே முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் அளித்து பயனடைய அறிவுறுத்தல்.

News June 11, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை-பாஜக புகார்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாஜக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மாநகர பாஜக சார்பில் அளித்துள்ள மனுவில், இந்த அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனர்,ஆனால் உரிய நாற்காலி வசதி கூட இல்லாமல் தரையில் அமர வைக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது

News June 11, 2024

ஜவுளி பூங்கா அமைக்க அழைப்பு..!

image

மதுரை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காஅமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா், மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -625 014 என்ற முகவரியில் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது  96595 32005 கைப்பேசி எண்களில் அழைக்கலாம்

error: Content is protected !!