Madurai

News July 13, 2024

கள்ளழகர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்

image

உலக பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோவில் கொடி கம்பத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்வாக 17 ஆம் தேதி கள்ளழகர் தங்க பல்லக்கில் எழுந்தருளல், 20 ஆம் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்வும் சிகர நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News July 13, 2024

தமிழக ஆளுநர் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

மதுரை விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1 மணி அளவில், தமிழக ஆளுநர் ரவி சென்னையில் இருந்து விமான மூலம் வருகிறார். பின் சாலை மார்க்கமாக விருதுநகர் சென்று காமராஜர் பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொள்கிறார். பின் மதுரையில் இருந்து 6.40 மணியளவில் சென்னைக்கு விமான மூலம் செல்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு, விமான நிலைய பகுதி, விருதுநகர் செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News July 13, 2024

மதுரை துணை மேயர் மனைவிக்கு நோட்டீஸ்

image

மதுரை மாநகராட்சி துணை மேயராக கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜன் இருந்து வருகிறார். இந்நிலையில், துணை மேயர் நாகராஜனின் மனைவி செல்வராணியின் பெயரில் உள்ள வீடு, பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக இன்று (12.7.24) வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு தொடர்பான நில அளவை பணிக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி ஆஜராக செல்வராணிக்கு உத்தரவிட்டுள்ளது.

News July 13, 2024

போலீசார் தாடி வைக்க தடை இல்லை: மதுரை ஐகோர்ட்

image

மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ஆம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இல்லையெனக் கூறி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

News July 13, 2024

திறப்பு விழாவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

image

மதுரையில் இன்று புதிதாக துவங்கப்பட்டுள்ள மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை (MSSH) உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பங்கேற்று திறந்து வைத்தார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 50 சிறப்பு பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

நியோமேக்ஸ் மோசடி-அதிரடி உத்தரவு

image

6 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை 15 மாதத்தில் முடித்து மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு DSPக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இன்று நடந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கும் வகையில், பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

News July 12, 2024

மர்டர் நகரமாக மாறுகிறதா மதுரை?

image

மதுரையில் கடந்த 4 நாட்களில் 4 கொலைகள் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ம் தேதி திருமங்கலம் வாகைக்குளத்தில் 70 வயது மூதாட்டி காசம்மாள் 65 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டார். நேற்று கச்சிராயன்பட்டியில் பாப்பு என்ற மூதாட்டியும், நேற்று முன்தினம் சிலைமானில் தோப்புக்குள் 56 வயது பெண்ணும், இன்று தனியார் மருத்துவமனையில் ஒரு மூதாட்டி என 4 கொலைகள் அரங்கேறியுள்ளது.

News July 12, 2024

டிடிஎஃப் வாசன் காரை ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு

image

டிடிஎஃப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரி, அவரது தாயார் சுஜாதா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “காரை ஒப்படைத்தால் டிடிஎஃப் வாசன் மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்ப்புள்ளது” எனக் கூறி காரை ஒப்படைக்க மறுத்ததோடு வழக்கை தள்ளுபடி செய்தது.

News July 12, 2024

அயோத்தி அழைத்து செல்வதாகக் கூறி 100 பேரிடம் மோசடி

image

மதுரையில் இருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக, இண்டிகோ விமானம் மூலம் 100 பயணிகளை அழைத்து செல்வதற்காக வசூல் செய்யப்பட்டது. இன்று அயோத்தி செல்வதற்காக 100 பயணிகள் விமான நிலையம் வந்து, இண்டிகோ விமான நிறுவனத்தில் கேட்டனர். அப்படி எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்து குழப்பம் அடைந்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News July 12, 2024

மதுரையில் ‘மாமதுரை விழா’ தொடக்கம்

image

மதுரை மாநகராட்சி முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களில், அழகிய ஓவியங்கள் வரையும் ‘மாமதுரை விழாவினை’ மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் பெரியார் பேருந்து நிலையம் சுவர்களில் ஓவியங்களை வரைந்து இன்று (ஜூலை 12) தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!