Madurai

News July 14, 2024

மதுரையில் 33 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

image

மதுரையை தலைமையாகக் கொண்ட தென்மண்டல காவல்துறை சரக்கத்திற்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 33 இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்து மதுரை சரக டிஐஜி துரை(பொறுப்பு) நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் பணியிடம் மாற்றப்பட்ட மதுரை மாநகர காவல்துறையை சேர்ந்த 5 இன்ஸ்பெக்டர்கள், நெல்லை மாநகர் காவல்துறையில் இருவர் என மொத்தம் 33 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 14, 2024

‘தமிழ்நாட்டில் காந்தி’ நூல் மதிப்புரைக் கூட்டம்

image

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நூல் மதிப்புரை கூட்டம் நடைபெற்றது. அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமைவகித்தார். அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி அலுவலர் ஆர்.தேவதாஸ் எழுத்தாளர் அ. ராமசாமி எழுதிய ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்னும் நூலை மதிப்புரை செய்து பேசினர். காந்தியவாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 14, 2024

ஈபிஎஸ் கேட்ட கேள்விக்கு மௌனம் காத்த செல்லூர் ராஜூ

image

மதுரையில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களையும் கேட்காத பல திட்டங்களும் செய்து கொடுத்த போதிலும், ஏன் வாக்குகளை அதிமுகவால் பெற முடியவில்லை எனவும் 3வது இடத்திற்கு ஏன் சென்றது என்பது குறித்து செல்லூர் ராஜூவிடம் தோல்வி குறித்த ஆலோசனையில் ஈபிஎஸ் கேட்டதாக சொல்லப்படுகிறது. அவரது இந்த கேள்விக்கு செல்லூர் ராஜூ மற்றும் மதுரையை சேர்ந்த பிற மாவட்ட நிர்வாகிகள் பதில் எதுவும் அளிக்காமல் மவுனம் இருந்துள்ளனர்.

News July 13, 2024

இந்து முன்னனி சேர்ந்த 38 பேர் மீது வழக்கு

image

மதுரை மூன்றுமாவடி பகுதியில் நேற்று நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட 38 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் இன்று போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News July 13, 2024

கப்பலூர் டோல்கேட்-முக்கிய ஆலோசனை

image

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்குமுன் போராட்டம் நடைபெற்றது. இதைதொடர்ந்து 15ம் தேதி திங்கள்கிழமை ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அனைவரும் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. 

News July 13, 2024

மதுரை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

image

மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளைச் சார்ந்த முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் ஏப்ரல் 2024 தேர்வு முடிவுகள் இன்று 13.07.2024 வெளியிடப்பட்டன. இத்தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணைய தளத்தில் www.mkuniversity.ac.in வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 13, 2024

குரூப் 1 தேர்வில் 4731 பேர் ஆப்சென்ட்

image

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு 49 மையங்களில் இன்று நடைபெற்றது. இதில் 14,770 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 10,039 பேர் மட்டுமே தேர்வெழுதிய நிலையில் 4731 பேர் தேர்வு எழுத வாராமல் “ஆப்சென்ட்” ஆகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 13, 2024

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் நெல் முதல்போக பயிருக்கு ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என மதுரை வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார். ஒரு ஏக்கருக்கு நெல்லிற்கு ரூ.712, மக்காச்சோளத்திற்கு ரூ.588, பருத்திக்கு ரூ.200, நிலக்கடலை ரூ.530, பச்சை பயறுக்கு ரூ. 308 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 13, 2024

கள்ளழகர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்

image

உலக பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோவில் கொடி கம்பத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்வாக 17 ஆம் தேதி கள்ளழகர் தங்க பல்லக்கில் எழுந்தருளல், 20 ஆம் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்வும் சிகர நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News July 13, 2024

தமிழக ஆளுநர் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

மதுரை விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1 மணி அளவில், தமிழக ஆளுநர் ரவி சென்னையில் இருந்து விமான மூலம் வருகிறார். பின் சாலை மார்க்கமாக விருதுநகர் சென்று காமராஜர் பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொள்கிறார். பின் மதுரையில் இருந்து 6.40 மணியளவில் சென்னைக்கு விமான மூலம் செல்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு, விமான நிலைய பகுதி, விருதுநகர் செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!