India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மகளிருக்கான சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் நாளை(ஜூன் 13) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஜிதா சைபர் குற்றம் தவிர்ப்பு குறித்து எடுத்துரைக்க உள்ளார். இந்த முகாமில் பங்கேற்ற அனுமதி இலவசம் என்பதால் பெண்கள் பங்கேற்று பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்து, கடை, தொழில், பாதாளச் சாக்கடை, குடிநீர் வரிகள், குத்தகை வருவாய் வசூலிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 1800க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகளில் நீண்ட நாட்களாக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நிலுவை வரியை வசூலிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டு சந்தையில் இன்று வாராந்திர ஆட்டு சந்தை நடைபெற்றது. வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட அதிகளவிலான ஆடுகள் விற்பனையானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கில் வியாபாரிகள், இஸ்லாமியர்கள் ஆடு வாங்குவதற்காக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 7 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் உதவியுடன், அமுதம் கூட்டுறவு அமைப்பு மூலம், தற்போது மதுரை பை-பாஸ் சாலை பொன்மேனியில் ‘ஆயுஷ்’ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
சிறப்பு என்னவென்றால், ஒரே இடத்தில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமி யோபதி , யோகா மற்றும் இயற்கை மருத்துவ பாரம்பரிய சிகிச்சைகள் கிடைப்பதுதான்.
இந்த மருத்துவமனை, மத்திய அரசு நிதியுதவியின் கீழ் செயல்படுகின்றது.
மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியருக்கான பள்ளி விடுதிகள் 27, கல்லூரி விடுதிகள் 8 என 35 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதியுடைய பள்ளி மாணவ மாணவிகள் வரும் 14ம் தேதிக்குள், கல்லூரி மாணவர்கள் வரும் ஜூலை 17க்குள் விடுதி காப்பாளர்களிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு.
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை , தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர், பின்னர் ” இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதமான வேளாண் விளைபொருள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று திமுகவின் நிர்வாகியும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மணி செல்வம் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக மு.க.அழகிரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா , ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பின் நீதிபதி, ”மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மக்களை காக்க வேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது” எனக் கூறி, விசாரணையை ஜூன் 18க்கு தள்ளி வைத்தார்.
தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் தமக்கு ஜாமீன் கோரி 2வது முறையாக தாக்கல் செய்த மனு மீது இன்று வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணை நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த வாரம் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று 2வது முறையாக ஒத்திவைப்பு
மதுரை மாவட்டத்தில் உள்ள 16 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கும் மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. இக்குழு இன்று மதுரை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மத்திய குழுவினரை வரவேற்று அவர்களுடன் ஆய்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.