India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சி வைகை கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 19ஆம் தேதி வார்டு எண்.10 முதல் 16 வார்டுகள் மற்றும் வார்டு எண்.21 முதல் 35 வரை உள்ள ஆகிய வார்டு பகுதிகளுக்கும், வரும் 21ம் தேதி வைகை தென்கரை பகுதிகளான வார்டு எண் 46, 47, 48, 49, 53, 70, 72 74 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யபடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாநகர் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாநகரில் ‘நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவல்துறையினர் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும். மீறும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்’ என கடுமையாக எச்சரித்துள்ளார்.
மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21 காலை 7:00 முதல் 7:40 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் எனவும் பயிற்சிகள் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் ஒருங்கிணைப்பாளர் தேவதாசை 99941 23091ல் தொடர்பு கொள்ளலாம் என காந்தி மியூசிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.119 கோடியில் 474 கடைகள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், பணிபுரியும் பணியாளர்களுக்கும் வாகன நிறுத்த வசதியுடன் கூடிய பிரம்மாண்ட வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ஓராண்டு அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர், இந்து சமய கோட்பாடுகளை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
மதுரை – பெங்களூரு ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து காணொளி காட்சி மூலம் இந்த புதிய ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார். முதன் முதலாக மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல கூடிய நேரடி ரயில் சேவை இதுவே ஆகும்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழாவின் 4ம் நாளான இன்று சிவப்பு நிற பட்டுடுத்தி மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் 100 கால் மண்டப ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினர். ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் ஓதுவாரால் ஓதப்பட்டு தீபாராதனை முடிந்து பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைந்தார்.
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய மனு 2ஆவது முறையாக இன்று தள்ளுபடி செய்தது. சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்டம் PC பட்டி காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீனை மனு தள்ளுபடி செய்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கண்காணிப்பாளர், முதுநிலை கணக்காளர், உதவி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பணியிடத்திற்கு 5 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளது. இந்நிலையில், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மதுரை எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக வரும் முகூர்த்தம் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை 5 மடங்கு உயர்ந்துள்ளது.
மல்லிகை கிலோ ரூ.1500 , முல்லை ரூ.500 , பிச்சி ரூ.400 , கனகாம்பரம் ரூ.1200 , அரளி ரூ.200, செவ்வந்தி ரூ.150 , சம்மங்கி ரூ.150 , பட்டன் ரோஸ் ரூ.150 விற்பனையாகின்றன.
குறிப்பாக நேற்றைய தினம் வரை 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் மதுரை மல்லியானது
இன்றைய தினம் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.