India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, திருமங்கலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒன்றும் தேச விரோதமில்லை . மேலும், தோல்வி பயத்தின் காரணமாகவே, அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை” எனக் கூறி அதிமுகவை பின்னடைவை சந்திக்க வைக்க நினைக்கும் எதிரிகளின் திட்டத்தை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.
மதுரையில் வைகை குடிநீர்த் திட்டம் 2ம் கட்டத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது 90% நிறைவடைந்துள்ள நிலையில் மேலும், பிரதான குழாயில் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக (நாளை)ஜூன்.19 வைகை வடகரை பகுதிகளில் வார்டு எண் 10 முதல் 16 வரை மற்றும் 21 முதல் 35 வரையான பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது. பெரியாா் பேருந்து நிலையம், கோகலே சாலை, மீனாட்சியம்மன் கோயிலின் சந்நிதி வீதிகள் உள்பட மாநகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. புதிய ரயிலுக்கான அதிகாரப்பூர்வ வழித்தடம், கட்டண விவரம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள தென்னக ரயில்வே மதுரை கோட்டம்
மதுரை பெங்களூர் வந்தே பாரத் சேவை வரும் 20ஆம்தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேவையின் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதினம், ” அரசியல் கருத்துக்களை தான் ஏன் சொல்லக்கூடாது?. தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன், தான் தமிழன், தானும் வாக்களிக்கிறேன், தனக்கு வாக்கு உரிமை உள்ளது. அதனால், தனக்கும் அரசியல் பேச உரிமை உள்ளது ” என்று கூறினார்.
மேலூர் தெற்குப்பட்டி சேர்ந்தவர் வேலுச்சாமி.இவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் இவரது மனைவி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவரது சகோதரர் முறையில் உள்ள முத்துப்பாண்டி (22) வேலுச்சாமியின் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை தட்டி கேட்ட அவரின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரின் மேலூர் போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், சாப்டூர் அருகில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, “சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில்” நடைபெறும் ஆனி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக வரும் 19ந் தேதி (புதன்கிழமை) முதல் 21ந் தேதி வரை (சனிக்கிழமை) வரை நான்கு நாட்கள், பக்தர்கள் மலையேற கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை 2000 பேர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு கலந்து கொண்டு உலக சாதனை முயற்சியாக விபரீத கரணி யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மஹரிஷி அறக்கட்டளை சார்பில் கோல்டன் புக் ஆப் உலக சாதனை முயற்சியாக விபரீத கரணி யோகாசனத்தை தொடர்ந்து 15 நிமிடம் நின்று சாதனை படைத்தனர்.
மதுரை கருப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜமுனா. இவர் தெற்கு வாசல் பகுதியில் இந்திரா என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் தனது 33 சவரன் நகையை அடமானம் வைத்து 9 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி செலுத்திய நிலையில் அடமானம் வைத்த 33 சவரன் நகையை திருப்பி தராமல் மோசடி செய்ததாக ஜமுனா அளித்த புகாரில் இந்திரா மீது நேற்று மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 37,000 ஹெக்டர் வனபரப்பளவு உள்ளது. இதில், மான், குரங்கு, காட்டுபன்றி, யானை உள்ளிட்ட 100கணக்கான வன விலங்குகள் உள்ள நிலையில் கடந்த 2015 முதல் 2024 பிப். மாதம் வரை மதுரை வனக்கோட்டத்தில் 435 மயில்கள், 258 புள்ளி மான்கள், 71 காட்டு மாடுகள் 40 குரங்குகள் உள்ளிட்ட 1030 வன விலங்குகள் உயிரிழந்துள்ளன. இதில், 93 வன விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது RTI மூலம் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.