India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள், திருவிழா பாதுகாப்பில் காவல்துறை முழு கவனம் செலுத்துகிறது. இம்மனு விளம்பரம் தேடும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என கருத்து தெரிவித்தது. இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதிக்க மனுதாரர் தரப்பு கேட்ட போது அனுமதித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிலுவையில் உள்ள வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி உட்பட அனைத்து வரிகளையும் இன்று ஊராட்சி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வசூலிக்க உள்ளனர். மேலும் தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலரை அணுகி ரொக்கமாகவோ, G-PAY , கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவும் வரி செலுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து நகை கடன் பெற்று சங்க செயலாளர், பணியாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி.தன்னையும் சம்மந்தப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சங்க பணியாளர்கள் மீது குற்றம் சாட்டி சங்கத்தின் எழுத்தர் பூச்சிபட்டியைச் சேர்ந்த செல்லாண்டி நேற்று வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல். 15) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள முக்கிய அரசு அலுவலர்களின் தொடர்பு எண்கள்
1.மாவட்ட வருவாய் அலுவலர் – 0452-2532106
2.மாவட்ட வழங்கல் அலுவலா் -0452-2546125
3.உதவி ஆணையா் (கலால்) – 0452-2531718
4.வருவாய் கோட்டாட்சியா் -0452-2530644
5.உதவி இயக்குநா் -0452-2525099
6. தனி துணை ஆட்சியா் – 0452-2521260
உங்கள் நண்பர்ளுக்கு ஷேர் செய்யவும்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
மதுரை எம்பி சு. வெங்கடேசன் இன்று (ஏப்.15) அவரது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. NCERT தொடங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர் பணிக்கு பல்வேறு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு M.Sc, ME/M.Tech, PhD படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை தகுதிகேற்ப மாத ஊதியம்வழங்கப்படும். இங்கு <
மதுரை, உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயி. நேற்று தோட்டத்திற்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சென்று பார்த்த போது மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். அதே போல் பொய்கைகரைப்பட்டியை சேர்ந்தவர் மலைசாமி. வீட்டில் கேபிள் டிவி வயரை தொட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.மின்சாரம் சம்பந்தமான பொருட்களைக் கையாள்பவர்களுக்குத் தகுந்த உபகரணங்களுடன் செயல்பட SHARE செய்து அறிவுறுத்துங்க
Sorry, no posts matched your criteria.