India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சரண். இவர் தனது ‘திருடன் சரண்’ என்ற இன்ஸ்டா பக்கத்தில் ‘ஹவுசிங் போர்டு விரைவில் பதறும், தலை சிதறும்’ என அச்சுறுத்தும் வகையில் வாசகங்களை பதிவிட்டு ‘ரீல்ஸ்’ வெளியிட்டார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக சதீஷ்குமார் என்பவர் அளித்த புகாரில் அவனியாபுரம் போலீசார் சரண் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 20ஆம் தேதி முதல் இயக்கப்படும் மதுரை- பெங்களூரு “வந்தே பாரத் ரயில்” சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதேபோல் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். மேலும், மதுரை – பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகராட்சி சாலை மற்றும் பொது இடங்களில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு உள்ளாட்சி அமைப்பு விதிகள் அடிப்படையில் பிப்.12ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கால்நடைகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை அடங்கிய புதிய தீர்மானம் குறித்து (https://shorturl.at/nme9M) ஆட்சேபனை அல்லது கருத்து இருந்தால் 15 நாட்களுக்குள் நேரிலோ கடிதம் மூலம் தெரிவிக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மதுரை: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் தரக் கோரி நிர்மலாதேவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இடைக்கால ஜாமின் தர மறுப்பு தெரிவித்த நீதிபதி ராமகிருஷ்ணன், விசாரணையை ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெருமைகளை அறியும் வண்ணம் நாடார் மகாஜன சங்கம் சார்பில் மதுரை மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வரும் 26ம் தேதி நடத்தப்படுகிறது. பேரையூர் ச.மேலப்பட்டி எம்.கே.வி.சாலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.7000, 2ம் இடத்திற்கு ரூ.5000, 3ம் இடம் பிடிப்போருக்கு ரூ.3000 ஊக்க பரிசாக வழங்கப்படும்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளர்ப்பு திட்டத்தின் கீழ், கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தல் திட்டத்தில் 2 பொது, 1 பெண், ஒரு ஆதிதிராவிடர் பிரிவினருக்கு தலா ரூ. 3 லட்சம் (இதில் மானியம் ரூ.1.8 லட்சம்) வழங்கப்படும். இதேபோல் பல்வேறு பிரிவுகளில் வழங்க உள்ள மானிய திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
வரும் 21.06.2024 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள்
http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.
மதுரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடத்தினை நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் அருந்ததியர் ஆதரவற்ற விதவை முன்னுரிமை பெற்றவர் (SCA Priority) என்ற இனச்சுழற்சியின் அடிப்படையில் பணியிடம் நிரப்பப்பட உள்ளதால் வரும் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் வரும் ஜூன்.21ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடக்க இருக்கிறது. விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக நேரில் வழங்கி தங்களது விவசாயம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் 10 நாள் நகை -ஆபரண அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் ஜூலை.2 ஆம் தேதி தொடங்குகிறது. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 – 45 வயது உள்ளவர்கள் பங்கேற்கலாம். அரசு சான்றிதழ்களுடன் உணவு, பயிற்சி உபகரணம், தங்குமிடம் இலவசம். விரும்புவோர் 94456 00561, mdu.rudset@gmail.com மூலம் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.