India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி கூறியதாவது: “அலங்காநல்லூர் கூட்டுறவு ஆலைகளில் கரும்பு பதிவு செய்ய சிவகங்கை, தேனி தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அதிகாரம் இல்லை.
எனவே, பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
மதுரையில் தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள ஆடி 18ம் அன்று ஆடி திருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காமராசர் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை தலைவர் சுவாமிநாதன் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆடி திருவிழாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட செய்தி குறிப்பில், மதுரை மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கட்டிடத்தின் தன்மையை பொறுத்து நிதியுதவி வழங்கப்பட உள்ளதால் தேவாலய நிர்வாகம் இதனை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை நகர்ப்புறம், ஊரக பகுதிகளில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பான புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா எண்: 10581, காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 100, மாநகர காவல் வாட்ஸ்அப் எண்: 8300021100 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரை நகர்ப்புறம், ஊரக பகுதிகளில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பான புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா எண்: 10581, காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 100, மாநகர காவல் வாட்ஸ்அப் எண்: 8300021100 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழா தனி சிறப்புடையது. இந்த ஆடி பெருந்திருவிழா வரும் ஜூலை.13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, ஜூலை. 21ஆம் தேதி தேரோட்டமும், மாலை பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சந்தன காப்பு நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
மதுரை அழகர் கோயிலில், இந்தாண்டுக்கான கடைகள் ஏலம், கோயில் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை தலைமை தாங்கினார்.
இதில் பூக்கடை, பஸ்நிலைய உணவு விடுதி மற்றும் பஸ் நிலைய தேநீர் கடை உள்ளிட்ட 34 வகையான கடைகள் ரூ.1 கோடியே 98 லட்சத்து 16 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாராயத்தை தடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதை பொருட்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்திய கம்யூனிட் கட்சி மற்றும் கிராமப்புற பெண்கள் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜூன் 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், சட்டமன்ற கூட்டத் தொடரில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆண்டுக்கு 2 லட்சத்து 70 ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையர் அமியகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம் மதுரை மண்டலத்தில் ஜூன் 27ஆம் தேதி நடைபெறுகிறது. வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.