India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதில், “மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 வட்டங்களில், ஆறு வட்டங்களுக்கான நத்தம் ஆவணங்கள் இணையவழி படுத்தப்பட்டுள்ளது. எனவே, நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இ சேவை மையம் மற்றும் Citizen portal வாயிலாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 21 – 40 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, “பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்க வரும் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக கால்நடைத்துறை அறிவித்துள்ளது. கொட்டகைக்கான கட்டுமான செலவு, தீவனத்தட்டு உள்ளிட்ட செலவு ஆகியவற்றில் 50 சதவீதம் என அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் மானியம் பெறலாம். இதில், விதவை, ஆதரவற்றோர், திருநங்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில், அரசு உதவியுடன், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஒளிப்பதிவுக்கான 30 நாட்கள் இலவச பயிற்சி ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு, “18 – 45 வயது இருபாலர்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.உணவு, தங்குமிடம் இலவசம். மேலும், பயிற்சி பெற 96262 46671 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் நாளை (ஜூன்.26) முதல் ஜூலை 29-ந்தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து நாளை (ஜூன்.26) அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கரூர், சேலம் வழியாக சென்று பெங்களூருவுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும். இதேபோல், மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும்.
மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கட்டிடத்தில் தங்க வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் எய்ம்சுக்கு தங்கும் விடுதியை வாடகைக்கு விடுவதற்கு விருப்பம் உள்ள அதன் உரிமையாளர்கள் தங்களின் கட்டண விவரங்களுடன் ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மதுரை – பெங்களூர் இடையே, வந்தே பாரத் சிறப்பு ரயில் (ஜூன்.26) முதல் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் இன்று அறிவித்துள்ளது. மதுரையில் காலை 5:15க்கு புறப்படும் ரயில், பகல் 1 மணிக்கு பெங்களூர் சென்றடையும். பெங்களுரில் இருந்து பிற்பகல் 1:45க்கு புறப்பட்டு, இரவு 9:45க்கு மதுரை வந்து சேரும். திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல் மற்றும் சேலம் நிலையங்களில் நின்று செல்லும்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ஆதி கேசவலுக்கு இன்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக நீதிமன்ற ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாயப்புள்ளதாக தகவல். தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.