India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேராசிரியர் இராம. சீனிவாசன் போட்டியிட்டார். தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனிடம் தோல்வியுற்றார் இராம சீனிவாசன். எனவே நேற்று(ஜூன் 26) மதுரை பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து உத்தங்குடி ஏ. ஆர். மஹாலில் பாஜக ஆய்வு கூட்டம் கே. பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் அளித்த மனுவில், 28 சதவீதம் வரை வரி விகிதம் உள்ளது. இது வரி ஏய்ப்பை ஊக்குவிக்கும். எனவே 28 சதவீத வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கப்பல் சரக்கு கட்டணம் மற்றும் விமான சரக்கு கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலையில், விடைத்தாள் திருத்த பேராசிரியர்கள் வராததால், ஏப்ரல் 2024 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து, “விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லுாரி பேராசிரியர்களை மாற்று பணியில் விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பல்கலை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை எழுத, படிக்க தெரியாதோர் 26,663 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு ஒன்றியம் பகுதியில் எழுத, படிக்க தெரியாதோர் குறித்து கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்தப் பணியை ஆய்வு செய்த வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர் இதனை தெரிவித்தார்.
மதுரை மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைக்குள் கஞ்சா, போதைப் பொருட்களை பயன்படுத்த கைதிகளிடம் சிறை காவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. விசாரணையில்,செல்வகுமார் என்ற கைதிக்கு கஞ்சா விநியோகிக்க அவரது நண்பரிடம் சிறைக் காவலர் முகமது ஆசிப் ரூ.5ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, முகமது ஆசிப்பை பணியிடை நீக்கம் செய்து சிறைக்கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
மதுரை மீனாட்சி மகளிர் அரசு கல்லூரியில் நிகழ் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளான நேற்று வணிகவியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், இன்று தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் 1,230 இடங்களுக்கு 12,853 மாணவிகள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரை மாவட்ட குழுவின் முயற்சியால், மத்திய அரசின் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. தற்போது ரயில்வே துறை பணித்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கேரளம், ஆந்திராவைப் போல், தமிழ்நாட்டிலும் கள் இறக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ”இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. எனவே, அரசின் விளக்கத்தை கேட்காமல் எந்த முடிவுக்கும் வர முடியாது” என்று கூறி வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதில், “மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 வட்டங்களில், ஆறு வட்டங்களுக்கான நத்தம் ஆவணங்கள் இணையவழி படுத்தப்பட்டுள்ளது. எனவே, நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இ சேவை மையம் மற்றும் Citizen portal வாயிலாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 21 – 40 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, “பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்க வரும் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.