Madurai

News June 28, 2024

உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்டம் பெறலாம்: அரசு அறிவிப்பு

image

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ” தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உயராய்வு மையமாகச் செயல்பட, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அங்கீகரிக்கப் பெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் முனைவர் பட்ட ஆய்வுகளை, முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் மேற்கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

News June 28, 2024

கள்ளக்குறிச்சி விவகாரம் – யாரையும் தண்டிக்க முடியாது – கி.வீரமணி

image

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தி.க.தலைவர் கி.வீரமணி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு அணுகுகிறது. மத்திய அரசும் வித்தை காட்ட மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஆனால், அவர்களால் சட்டப்படி யாரையும் தண்டிக்க முடியாது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று தெரியாமல் ஊடக வெளிச்சத்திற்காக நியமனம் செய்கிறார்கள் என்றார்.

News June 28, 2024

மதுரையில் உலக தரத்தில் நீச்சல் குளம்

image

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில்  டைவிங் பூல் உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் அடிப்படையில் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு நல ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

News June 27, 2024

மதுரையில் உலக தரத்தில் நீச்சல் குளம்

image

“மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில்  டைவிங் பூல் உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கப்படும் என” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் அடிப்படையில் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு நல ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

News June 27, 2024

ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

image

மதுரை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு டாப்செட்கோ மூலம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவித்துள்ளார்

News June 27, 2024

பட்டா மாறுதலுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில்,பட்டா மாறுதல் “தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள எங்கிருந்தும் எப்பொழுது வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் – நாகர்கோவில் தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை ஜூன் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் சேவை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 27, 2024

4 ஆண்டுகளில் 224 கடைகளுக்கு சீல்

image

மதுரை மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கடந்த 2020 முதல் 2024 மார்ச் மாதம் வரை 4 ஆண்டுகளில் 224 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மருதுபாண்டி என்ற சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News June 27, 2024

கள்ளழகர் கோவிலில் இனி நாள் முழுவதும் அன்னதானம்

image

தமிழகத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 11 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நேற்று சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 27, 2024

மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

image

மதுரையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நுழைவாயில் முன் வழக்கறிஞரகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாலும், இந்திய அரசியலமைப்பு பிரிவு 348க்கு எதிராக நிறைவேற்றப்பட்டதாலும் அவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

error: Content is protected !!