India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஏஓக்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருமங்கலம் வருவாய் கோட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி ஆகிய 3 தாலுகாக்களில் விஏஓக்களுக்கு பணியிடை மாறுதல் கலந்தாய்வு திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. அதில் 3 தாலுக்காக்களை சேர்ந்த 24 விஏஓக்கள் பணியிட மாறுதல் பெற்றனர்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிா் காக்கும் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் தொடங்கப்படும் என நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் இந்த நவீன சிகிச்சைகளை எளிதாக பெற முடியும் என மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தர்மராஜ் நம்பிக்கை தெரிவிதுள்ளார் .
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிா் காக்கும் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் தொடங்கப்படும் என நேற்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதன் மூலம் ஏழை எளிய மக்கள் இந்த நவீன சிகிச்சைகளை எளிதாக பெற முடியும் என மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தர்மராஜ் நம்பிக்கை தெரிவிதுள்ளார் .
மதுரையைச் சேர்ந்த ‘நியோமேக்ஸ்’ என்ற தனியாா் மோசடி நிதி நிறுவன இயக்குநா்களின் பிணையை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி, “நிதி மோசடி சம்பந்தமாக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன, தீா்வு காணப்பட்டுள்ளன. எவ்வளவு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்பது குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தனது ‘செயல்திறன் அறிக்கை’ (performance report) ஒன்றை நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையின்படி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இதுவரை 64,798 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.
மதுரை அரசு இசைக்கல்லூரியில் இசை நாடகம், கரகம், பறை, மரக்கால் ஆட்டம் ஆகிய கலைகள் பயில வாரம் 2 நாட்கள் (வெள்ளி & சனி) மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலவச பயிற்சிகள் நடைபெற உள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், ஜூலை 12ஆம் தேதி முதல் வகுப்பு தொங்குகிறது. ஓராண்டு பயிற்சிக்கு பின் அரசு தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழகச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வரும் 05.08.2024 முதல் 14.08.2024 வரை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மீனாட்சியம்மன் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும். 7 ஆம் நாளான 11.08.2024 அன்று வீதியுலா முடிந்த பின் உற்சவர் சந்ததியில் அம்மன் மற்றும் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அருப்புக்கோட்டையை சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் நேற்று முன்தினம் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர்கள் அனைவரையும் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து இன்று 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 6 பேர் மீது வழக்கு பதிந்து வன்கொடுமை தடுப்பு வழக்காக போலீசார் மாற்றம் செய்ததையடுத்து உடலை பெற்றனர்
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ” தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உயராய்வு மையமாகச் செயல்பட, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அங்கீகரிக்கப் பெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் முனைவர் பட்ட ஆய்வுகளை, முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் மேற்கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தி.க.தலைவர் கி.வீரமணி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு அணுகுகிறது. மத்திய அரசும் வித்தை காட்ட மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஆனால், அவர்களால் சட்டப்படி யாரையும் தண்டிக்க முடியாது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று தெரியாமல் ஊடக வெளிச்சத்திற்காக நியமனம் செய்கிறார்கள் என்றார்.
Sorry, no posts matched your criteria.