India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி பகுதியில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 140 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் 17 காளைகள் களம் இறங்கி சீறிப்பாய்ந்தன.
இதில் காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 2768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு நேற்று (ஜூலை.21) நடைபெற்றது. இதற்கான மதுரை மாவட்டத்தில் 1,305 பேர் விண்ணப்பித்திருந்தனர். செயின்ட்மேரிஸ், நிர்மலா பள்ளி உள்ளிட்ட 4 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 1,240 பேர் எழுதிய நிலையில் 65 பேர் தேர்வு எழுதவில்லை.
மதுரையில், நடிகர் சிவாஜி சிலைக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, 2026 தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசியதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.
மதுரையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் 14வயது பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி சூர்யா இன்று குஜராத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வருவதையறிந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை வருவாய் மாவட்ட அதிமுகவை நிர்வாக ரீதியாக 5 மாவட்டங்களாகப் பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக 3 மாவட்டங்களாகச் செயல்படுகிறது. அதிமுகவின் தொடர் தோல்வியை தொடர்ந்து 5 மாவட்டங்களாக பிரித்து தேர்தல் களப்பணியை தீவிரப்படுத்தி, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் நோக்கில் இம்முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் சமீபத்தில் சி.ஐ.எஸ்.சி.இ சார்பில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில் மதுரை விகாசா பள்ளி மாணவி தேஜஸ்வினி 19-வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு தகுதியாகியுள்ளார்.
பாஜகவில் இருந்து 200 நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மதுரை மாநாகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் அதிருப்தி தெரிவித்து பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சில முக்கிய நிர்வாகிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்படுகின்றனர். ஒன்றரை ஆண்டுக்குள் 200 பேரை பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளிக்குடி, குராயூர், சிவரக்கோட்டை பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.40,750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.815 செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய ஆக.31 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் பெயர், ‘உயா்நீதிமன்ற மதுரை அமர்வு என மாற்றப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20ஆம் ஆண்டு விழாவில், இந்தப் புதிய பெயா்ப் பலகையை காணொலி காட்சி மூலமாக, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், ‘உயர்நீதிமன்ற மதுரை கிளை’ என்ற பெயர் மாற்றப்பட்டது.
வேளாண் துறை சார்ந்த சுயதொழில் புரிய பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக, சேடப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், “மத்திய அரசு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சுயதொழில் புரிய விரும்புவோர் வயது 21- 40க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.