India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் நாளை (அக்.30) 117வது தேவர் ஜெயநதி விழாவை முன்னிட்டு அக்.29, அக்.30 தேதிகளில் மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்.29 மற்றும் அக்.30 தேதிகளில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணிவரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகின்றன.விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி அனுமதிக்கப்படுகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியன்று ராணுவ வீரராக நடித்துள்ள அமரன் திரைப்படம் வெளியிட வெளியாக உள்ளது. இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக நாளை காலை மதுரை பரவை அருகே உள்ள மங்கையர்கரசி மகளிர் கல்லூரிக்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனை காண அவரது ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
மதுரையில் மின்சாரம் பருவ மழை & இயற்கை பேரிடர் காலங்களில் மின்சாரம் தடைபட்டாலும் மின் கம்பி அறுந்து விழுந்தாலோ யாரைத் தொடர்பு கொள்ளலாம். அதன்படி மதுரை கிழக்கு கண்ணன் 9445852848, சிலைமான் விரகனூர் கதிர்வேல் 9445852979, கொட்டாம்பட்டி, கீழையூர்,ஆட்டுக்குளம், சந்திரன் 9445852854, அழகர் கோயில் மேலூர், அருண்குமார் 944585 2853, ஊமச்சிக்குளம், ஒத்தக்கடை கண்ணன் 9445852852- ஐ அழைக்கலாம். (பகிரவும் – SHARE)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 30-ல் நடைபெற உள்ளது. இதற்காக வருகின்ற 29ஆம் தேதி மதுரை வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுகவின் அமைச்சர் மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கட்சி இதற்கு அழைப்பு விடுத்து இருக்கின்றனர்.
மதுரை திருநகர் மகாலட்சுமி காலனி ரமேஷ் மகன் ஹரிஷ்பாபு 16. பிளஸ் 1 மாணவரான இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் விளாச்சேரி கண்மாயில் குளிக்க சென்றார். ஆழமான பகுதியில் சென்ற போது சகதியில் சிக்கிய ஹரிஷ்பாபு நீரில் மூழ்கினார். திருப்பரங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ஹரிஷ்பாபு உடலை மீட்டனர். திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை வாடிப்பட்டி அருகே சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வரும் நிலையில் பள்ளியின் மாடியில் வைத்து இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மாடியில் நூற்றுக்கணக்கான மது பாட்டில்களும் குவிந்து கிடப்பதால் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
மதுரையில் செய்தியாளர்களை சந்திப்பின் போது விஜயின் தவெக மாநாடு குறித்து பதிலளித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் : விஜயின் அரசியல் பயணத்திற்கான வெற்றியை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு அண்ணனாக தம்பி விஜயின் இந்த புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். 2026 தேர்தல் பணிக்காக நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்; நாங்கள் தனித்து போட்டியிடும் நோக்கத்தில் உள்ளோம்; எனது இலக்கே எனது பயணம் எனக்கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தற்போது விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் திட்டங்களை சற்றுமுன் கேத்ரின் பாண்டியன் வெளியிட்டார். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும். உயர்நீதி மன்றக்கிளை அமைக்கப்பட்டது போல மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவன் அபிஷேக்கை கைது செய்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக விஜயின் மாநாடு குறித்து மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். ஒரே கொள்கையாக இருந்தால் கூட்டணி அமைத்து நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலம் தான் இதனை நிர்ணயம் செய்யும். இந்த இடத்தில் தம்பி விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.கருத்தரிக்கும் போதே அது பெண் குழந்தை ஆண் குழந்தை என ஏன் நீங்கள் சண்டை போடுகிறீர்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
Sorry, no posts matched your criteria.