India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்ட அதிமுகவினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், ஊராக உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிக்கான வாய்ப்பு இருக்காதோ? என்ற அச்சத்தில் கடந்தமுறை போட்டியிட்ட பலரும் தற்போது போட்டியிட மறுப்பு தெரிவித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை அரசு மகளிர் தொழில்பயிற்சி நிலையத்தில், 2024ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், 14 வயதிற்கு மேற்பட்ட 8 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர், மதுரை அரசு மகளிர் தொழில்பயிற்சி நிலையத்தில் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார், புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில்வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சைபர் குற்றங்களை விசாரிக்க போதிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளார்களா? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தென் மாவட்டங்களில் பதிவாகும் சைபர் குற்றங்களுக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் உள்ளனவா? என, தென் மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளிலிருந்து, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமின்றி வண்டல் மண் எடுத்துச் செல்லாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப மனுக்களை உரிய ஆவணங்களுடன் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே கடந்த மாதம் கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், கந்துவட்டி கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக 6 பேரை கைது செய்திருந்த நிலையில் கைதான 3 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆணையில் இருந்து விவசாயத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள். மேலும், இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ.347 கோடி மதிப்பீட்டில், மதுரை ரயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ரயில் பயணிகளுக்கு சிரமாக இருந்த பார்க்கிங் பிரச்சனையை தீர்க்கும் வகையில், 500 வாகனங்கள் ஒரே நேரத்தில நிறுத்தும் வகையில் 3 மல்டி லெவல் வாகன நிறுத்தும் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரயில் பயணிகள் தங்களது வாகனங்களை சிரமமின்றி நிறுத்த முடியும்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற நடைமுறை உள்ளது. ஆனால், அதனை பின்பற்றாமல் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில், 3468 பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுக்குறித்து கூடுதல் கலெக்டர் மோனிகா நேற்று பேசியபோது, “தகுதியானவர்களை உறுதி செய்யும் குழுவில் கலெக்டர், ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், உதவிப் பொறியாளர், ஏபிடிஓ ஆகியோர் உள்ளனர். குடிசை வீடுகளின் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்ற பின் இறுதி செய்யப்படும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.