Madurai

News July 24, 2024

திருக்குறள் கூட இடம்பெற வில்லை – சு.வெங்கடேசன்

image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. நிதியமைச்சர் வழக்கமாக சொல்லும் திருக்குறள் கூட இந்த ஆண்டு இடம்பெற வில்லை. மேலும் ரூ.4 கோடி வேலை வாய்ப்பு என்று அறிவித்த நிலையில் 2014 இல் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்த திட்டம் இளைஞர் தலையில் இடியாக விழுந்துள்ளது என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

ஆளுநர் மீது எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்

image

தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை “முன்னோக்கு நிதிநிலை அறிக்கை” என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது “எக்ஸ்” தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜூலை 31ல் பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல…. எனவும் அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர்.என்.ரவி எனவும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

News July 23, 2024

போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரியாணி

image

மதுரை, கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மின்கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

News July 23, 2024

ரயில் பெட்டியில் உணவகம்

image

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- மதுரை கோட்டத்தில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதன்முறையாக ரயில் பெட்டியில் உணவகம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான மின்னணு ஏல ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உணவகம் நடத்துவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ள உணவக உரிமையாளர்கள் இந்த மின்னணு ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

News July 23, 2024

அஞ்சல் அலுவலகங்களில் 103 காலியிடங்கள்

image

இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 44,228 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர் 21 இடமும், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் 61 இடமும், தாக் சேவாக் 21 என மொத்தம் 103 காலியிடங்கள் உள்ளன. எனவே தகுதியான நபர்கள் வரும் 5.8.2024 தேதிக்குள் விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News July 23, 2024

மனு அளிக்க குவிந்த மக்கள்

image

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன்வசந்த் பொதுமக்களிடமிருந்து மனுக்களை இன்று (23.07.2024) பெற்றுக்கொண்டார். முகாமில் 120 பேர் பல்வேறு அடிப்படை வசதிகள், வீட்டு வரி, சொத்து வரி குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News July 23, 2024

பட்ஜெட் தாக்கல் செய்யும் மதுரை பெண்

image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 7 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இவர் 1959 இல் மதுரையில் பிறந்தார். பின்னர் திருச்சி,சென்னையில் பள்ளி மற்றும் இளங்கலை படிப்பை முடித்தார். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். மதுரையை சேர்ந்த பெண் 7 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வது மதுரை மக்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

News July 23, 2024

மதுரையில் 84 காலிப் பணியிடங்கள்

image

இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுரை கேரேஜ் ஓர்க்ஸ் பணிக்கு 84 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்புமுள்ளவர்கள் ஆக.12ஆம் தேதிக்குள் https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 23, 2024

மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை பட்ஜெட்டை எதிர்பார்க்கும் மக்கள்

image

மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விளாத்திகுளம், மீளவிட்டான் வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க 2011- 12 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 339 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.2053 கோடி. இத்திட்டத்திற்கு இன்றைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

News July 23, 2024

காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சேர்க்கை துவக்கம்

image

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்ட படிப்புக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது. எனவே, தமிழ், பிரெஞ்சு, அரசியல், அறிவியல், சமூகவியல், தத்துவம், சமயம், வரலாறு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், நிர்வாகவியல், மொழியியல், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பாடங்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!