India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிறார்கள் ஈடுபடும் குற்றங்கள் 40க்கும் மேல் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக, 50 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. கொலை வழக்குகளில் பெரும்பாலும் சிறார்கள் தொடர்புடையவர்களாக உள்ளதால், அதை தடுக்க காவல்துறை கவனம் செலுத்துகிறது.
பொருளாதார ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் கட்டண தீண்டாமை பக்தர்களுக்கிடையே வேறுபாட்டை உருவாக்கியுள்ளது என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் மதுரை சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார். “தரிசன கட்டணமுறை சமூகநீதி கோட்பாட்டிற்கும், இந்து ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தமிழக அரசு தரிசனக் கட்டண முறையை படிப்படியாக குறைத்து கோயில்களில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் விபத்து குறித்து 39 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 23 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர். 2023ஆம் ஆண்டில் மட்டும் படியில் பயணித்த 41 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்ததாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானவா்களில் 87% பேர் 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் எனவும், 13%பேர் பெண்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று விரைவில் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான 936 பக்கங்கள் கொண்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே வழங்கி உள்ளது. இதனால், மதுரையில் மெட்ரோ பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவித்தனர்.
மதுரையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் இன்றும் மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரை நகரம் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவிற்கு விசுவாசமாக ஓபிஎஸ் இருந்த வரலாறு கிடையாது. கட்சி பொதுக்குழு எடுத்த முடிவால் அவரை மீண்டும் இணைக்க முடியாது. 1 சதவீதம் கூட அவரை சேர்க்க வாய்ப்பு இல்லை என்றார்.
அகழாய்வில் கண்டெடுக்கப்படும் சுடுமண் சிற்பங்களை மதங்களோடு ஒப்பிடக்கூடாது என தொல்லியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெறும் சுடுமண் சிற்பங்களை, சிறுவர்கள் விளையாட பயன்படுத்தியிருக்கலாம் என்பதால் அதை எந்தவித மதத்துடன் ஒப்பிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.
சிறந்த உயிர்ம விவசாயியிக்கான ‘நம்மாழ்வார் விருது’ வழங்கப்பட உள்ளதாக மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜ் அறிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்திருக்க வேண்டும். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயி அக்ரிஸ்நெட் வலைதளத்தில் 2024 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மதுரை மக்களவை தேர்தலில் மதுரை மாநகர செயலாளர் செல்லூர் ராஜுவுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தேர்தல் தோல்விக்கு பின் செல்லூர் ராஜுவுடனான நெருக்கத்தை தவிர்த்து அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று மேற்கு மாவட்ட செயலாளரான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்ற நிகழ்வில் சரவணன் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.
மதுரை ஆவின் நிறுவனத்தில் அதீத உயா் வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் பாலின் விலை ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆவின் பொது மேலாளா் சிவகாமி நேற்று தெரிவித்துள்ளார். மி.லி. பால் ரூ.30இல் இருந்து ரூ.28க்கும், 150 மி.லி. பால் ரூ.12இல் இருந்து ரூ.10க்கும் விற்கப்படுகிறது. இந்தத் தள்ளுபடி விலைகள் டிசம்பா் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.