India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் இன்று வணிகர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேர்தல் பிரச்சாரத்தில் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகளாகியும் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டினார். மேலும், டோல்கேட் விவகாரத்தில் மக்களுக்காக களம் இறங்கி போராடுவோம் என்றார்.
மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தென் மண்டல காவல்துறை தலைவராக தற்போது சென்னையின் கூடுதல் ஆணையராக பணியற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2021 காலகட்டத்தில் மதுரையில் காவல் ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகரில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வண்ணம் இருசக்கர வாகனத்தில் சாகசம் (Bike Racing, Rash Driving, Wheeling) ஈடுபடுபவர்களை கண்டால் அந்த இருசக்கர வாகனத்தை வாகன எண்ணுடன் Photo அல்லது Video எடுத்து 88000-21100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மாநகர் காவல் துறை தெரிவித்துள்ளனர். மேலும் சாகசத்தில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு இபிஎஸ் யார் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி போன்று நான் சர்வாதிகாரமாகவும், தெனாவட்டாகவும் பேச மாட்டேன். அவர் பொதுச் செயலாளராக நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. நான் எந்தக் காலத்திலும் இபிஎஸ்-யிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை” என்றார்.
முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி உதயகுமார், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளுக்கு முதலுதவி அறை கட்டி தர வேண்டும் என்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதற்கு உரிய உத்தரவை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி புதிய கட்டடங்களுக்கு, 30 நாட்களில் வரி நிர்ணயம் செய்து வசூலிக்கும் பணியை துரிதப்படுத்த உதவி வருவாய் அலுவலர், பில் கலெக்டர்களுக்கு ஆணையர் தினேஷ் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, ஏப்ரல் முதல் தற்போது வரை வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டதால், மாநகராட்சியின் ஆண்டு சொத்து வருவாய் 3 மாதங்களில் ரூ.6 கோடியாக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழத்தில், நேரடி இளங்கலை படிப்புகள் (யு.ஜி.) முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், யு.ஜி., படிப்புகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த 1,642 மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இங்கு விண்ணப்பித்த மாணவர்கள், மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி பிரச்னை காரணமாக இந்த மாற்றம் கொண்டுவததாகக் கூறப்படுகிறது.
மதுரை அரசு இசைக்கல்லூரியில் ஜூலை 12ஆம் தேதி முதல் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி துவங்க உள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதற்கு 17வயது முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.500 கட்டணத்தில் தமிழர் பாரம்பரிய கலையான இசை, நாடகம், கரகாட்டம், மரக்காலாட்டம் மற்றும் பறையாட்டம் ஆகிய கலைகள் கற்றுக்கொடுக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 95667-18704 என்ற எண்ணை அழைக்கலாம்.
திருமங்கலம் – கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை (ஜூலை 9) நள்ளிரவு 12 மணி முதல் உள்ளூர் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி அமலுக்கு வரவுள்ளது. இதுவரை கட்டமின்றி சென்று வந்த உள்ளூர் வாகனங்கள், நாளை முதல் 50% கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு எதிராக, பல்வேறு போராட்டங்களை மக்கள் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 2024-25ஆம் கல்வி ஆண்டின்படி ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு கையடக்க கணினி (TABLET) வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2,855 கையடக்க கணினிகளை ஆட்சியர் வழங்கினார். இதன் மூலம், மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பிக்க முடியும்.
Sorry, no posts matched your criteria.