India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 17ம் தேதி பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த பாரம்பரிய விதை திருவிழாவில் பங்கேற்க இன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளர் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்து இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், 15ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து 9 மணி நேரம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, இன்று மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர், மதுரை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசிற்கு எதிராகவும், முப்பெரும் சட்டங்களின் பெயர்களை திருத்தம் செய்ததை கண்டித்தும் முழக்கமிட்டபடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மதுரை மாநகர திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
காவேரி மணியத்தின் மனைவி ராசம்மாள் (90) இன்று அதிகாலை வயது முதிர்வால் காலமானார். அவரது மறைவையொட்டி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது, மேயர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் 2 தேர்வு செப்.14இல் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான மென்பாடக் குறிப்புகள் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளதால், தங்கள் சுயவிவரங்களை உள்ளீடு செய்து குறிப்புகளை பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில், நாளை (ஜூலை 11) முதல் இருவாரம் யோகா பயிற்சி வகுப்பு நடக்கிறது.
தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், அருகில் உள்ள டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை பெண்களுக்கான பிரத்யேக யோகா வகுப்பு நடக்கிறது.
விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற 13.07.2024 அன்று குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு/மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016இல் கஞ்சா கடத்திய வழக்கில் கணேசன் என்பவருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நாட்டில் 10 முதல் 17 வயது வரையுள்ள 1.58 கோடி குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்
நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் (தமிழ் & ஆங்கிலம்) காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளது. எனவே, தகுதி உடையவர்கள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வரும் 12ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.