India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை வழக்கறிஞர் பாலாஜி, “தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்த வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை இன்று (11.7) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சாலைகளில் திரியும் ஒட்டுமொத்த நாய்களுக்கும் கருத்தடை செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும், எத்தனை கால்நடை டாக்டர்கள் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஜூலை 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ‘பணியாளர் நாள்’ சிறப்பு முகாம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற உள்ளது. எனவே பணியாளர் பணி தொடர்பான குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 97 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 38,441 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போது நடைபெறும் 2ஆம் கட்ட முகாமிலும் அனைத்து மனுக்கள் மீதும் கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், குறைகளை தீர்வு செய்திடும் வகையில் “முதல் பணியாளர் நாள் நிகழ்வு” நாளை (12.07) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 73 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்கள் இன்று (ஜூலை 11) முதல் தொடங்கி, வருகிற 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 395 கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், 15 அரசுத் துறைகளின் மூலம் 44 சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்த முகாம்கள் நடைபெறும். முன்னதாக கடந்த டிசம்பரில் மதுரை மாவட்டத்தில் 97 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது.
மதுரை திருவள்ளுவர் சிலை முன்பாக நேற்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்வப்பெருந்தகை குறித்து அவதூறாக பேசியதற்கு ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென அண்ணாமலையின் உருவப்படத்தை தீ வைத்து எரித்ததோடு, அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் தடுத்த போது போலீசாருக்கும் கட்சியினருக்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது. இதனிடையே மதுரையில் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அதேபோல் இன்றும் மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரியும், மதுரை நகர் பகுதியில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வாட்டி வதைத்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்தவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவ கழிவுகளை எரிக்கும்போது தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி கலையரசனின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்ககோரிய மனுவில் உத்தரவு பிறப்பித்தார்
மதுரை சொக்கிகுளம் காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தில் காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சாத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி சிறப்புரையாற்றினார். அப்போது நமது கலாச்சாரம் அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும் எனவும். அதை நமது அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.