India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
6 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை 15 மாதத்தில் முடித்து மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு DSPக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இன்று நடந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கும் வகையில், பெரிய அளவில் பத்திரிகை விளம்பரம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் கடந்த 4 நாட்களில் 4 கொலைகள் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ம் தேதி திருமங்கலம் வாகைக்குளத்தில் 70 வயது மூதாட்டி காசம்மாள் 65 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டார். நேற்று கச்சிராயன்பட்டியில் பாப்பு என்ற மூதாட்டியும், நேற்று முன்தினம் சிலைமானில் தோப்புக்குள் 56 வயது பெண்ணும், இன்று தனியார் மருத்துவமனையில் ஒரு மூதாட்டி என 4 கொலைகள் அரங்கேறியுள்ளது.
டிடிஎஃப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரி, அவரது தாயார் சுஜாதா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “காரை ஒப்படைத்தால் டிடிஎஃப் வாசன் மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்ப்புள்ளது” எனக் கூறி காரை ஒப்படைக்க மறுத்ததோடு வழக்கை தள்ளுபடி செய்தது.
மதுரையில் இருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக, இண்டிகோ விமானம் மூலம் 100 பயணிகளை அழைத்து செல்வதற்காக வசூல் செய்யப்பட்டது. இன்று அயோத்தி செல்வதற்காக 100 பயணிகள் விமான நிலையம் வந்து, இண்டிகோ விமான நிறுவனத்தில் கேட்டனர். அப்படி எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்து குழப்பம் அடைந்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களில், அழகிய ஓவியங்கள் வரையும் ‘மாமதுரை விழாவினை’ மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் பெரியார் பேருந்து நிலையம் சுவர்களில் ஓவியங்களை வரைந்து இன்று (ஜூலை 12) தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மதுரையில் மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்வது அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகிறது. திமுக ஆட்சியில் கொள்ளை, கொலை என்ற செய்தி வராதே நாளே இல்லை. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது. ஆளுங்கட்சியின் பசிக்கு காவல்துறை இரையாகி வருகிறது” என்றார்.
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் புகுந்து, மர்ம நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் பணியாற்றும் முத்துலட்சுமி என்ற பெண் ஊழியரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர், முத்துலட்சுமி அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றுள்ளார். வெட்டப்பட்ட முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கலை, அறிவியல் கல்லூரியில் வரும் 14ஆம் தேதி திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 3 பிரிவுகளாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1 பிரிவாகவும் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.25,000 ரொக்க பரிசு வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.
மதுரை வழக்கறிஞர் பாலாஜி, “தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்த வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை இன்று (11.7) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சாலைகளில் திரியும் ஒட்டுமொத்த நாய்களுக்கும் கருத்தடை செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும், எத்தனை கால்நடை டாக்டர்கள் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஜூலை 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ‘பணியாளர் நாள்’ சிறப்பு முகாம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற உள்ளது. எனவே பணியாளர் பணி தொடர்பான குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.