Madurai

News August 1, 2024

13 நாளில் 9 ரயில் விபத்து: MP வெங்கடேசன் சாடல்

image

மக்களவையில் நேற்று(ஜூலை 31) நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மதுரை MP சு.வெங்கடேசன், “ஒரு காலத்தில் இரயில்வேக்கு என்று தனிபட்ஜெட் இருந்தது. நாடாளுமன்றத்தில் அதனைப்பற்றிய விவாதம் நடக்கும். ஆனால் ரயில்வே பட்ஜட்டையே ஒழித்துக்கட்டிய பெருமை பாஜகவையே சாரும். இதனால்தான் 13 நாளில் 9 ரயில் விபத்துகள் நடந்துள்ளது” என மத்திய அரசை சாடினார்.

News July 31, 2024

20 ஆண்டுகளில் 5,557 லஞ்ச வழக்குகள் பதிவு

image

தமிழகத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 5,557 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில், 3,035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1,059 வழக்குகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும், 574 வழக்குகளில் தீர்ப்பாய ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

குண்டர் சட்ட அறிவுரை கழகம் அமைக்க உத்தரவு

image

மதுரையில் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தை 2 மாதங்களில் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்ட அறிவுரை கழகத்தை 2 மாதங்களில் அமைக்க தவறினால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. பொதுநல வழக்கு ஒன்றில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News July 31, 2024

புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பதவியேற்பு

image

மதுரை ரயில்வே கோட்டத்தின் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக எல்.என்.ராவ் இன்று (ஜூலை 31) பதவி ஏற்றார். முன்னதாக கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த சி. செல்வம் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எல்.என்.ராவ் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்பாக மேற்கு ரயில்வே இந்தூர் கட்டுமானப் பிரிவில் துணை முதன்மை பொறியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

News July 31, 2024

ஆன்லைனில் கடன் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

image

திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் பெற்று, அதனை முழுமையாக செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு, ராகுல் என்ற பெயரில் கடனை உடனே திருப்பி செலுத்தாவிட்டால், உங்கள் படத்தை ஆபாசமாக சித்தரித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் அனுப்பப்படும் என மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News July 31, 2024

கலைஞர் நூலகம் – முதல்வர் நெகிழ்ச்சி

image

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த நூலகத்துக்கு 10 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் 10 லட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடுக – சீமான்

image

நாம் தமிழர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.

News July 31, 2024

மத்திய அரசை விமர்சித்த மதுரை எம்.பி

image

நாடாளுமன்றத்தில் தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா? என ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசினார். அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டார். இதற்கு நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில்
பாஜகவின் குரல் மிகுந்த அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள் என மதுரை எம்.பி. தனது X தளத்தில் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.

News July 31, 2024

பிறப்பு சான்றிதழ் பெற நாமே விண்ணப்பிக்கலாம்

image

மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கு இணையதளத்தில் தங்களது விவரங்களை தாங்களே பதிவு செய்து தாய் சேய் நல அடையாள எண் (சுயமாக கர்ப்பப் பதிவு எண்) பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://picme3.tn.gov.in/ என்ற இணைய பக்கத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 30, 2024

பேருந்து மீது பைக் மோதி இளைஞர் பலி

image

மேலூர் – மதுரை சாலையில், பள்ளி வாசல் அருகே இன்று காலை தனியார் பேருந்து மீது மேலூரில் இருந்து மதுரையை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், பேருந்தின் முன் பகுதியில் இருசக்கர வாகனம் சொருகிக் கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலூர் எஸ்ஐ பழனியப்பன், இறந்த நபர் குறித்து விசாரித்து வருகிறார்.

error: Content is protected !!