Madurai

News August 1, 2024

சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமின்

image

பட்டியலினத்தவருக்கு எதிராக பேசிய வழக்கில், சாட்டை துரை முருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளதாக கண்டித்த நீதிமன்றம், பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான் ஆனால் அதனை வரம்பு மீறி பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறை வழங்கியது.

News August 1, 2024

அட்டாக் பாண்டிக்கு 10 நாட்கள் பரோல்

image

மதுரையில் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்த வழக்கில் அட்டாக் பாண்டிக்கு 2019-ல் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இவருக்கு சாதாரண பரோல் விடுமுறை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு இன்று உத்தரவிட்டது. மேலும் அவர் ஊடகங்களுக்கு எவ்விதமான பேட்டியும் வழங்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் விடுப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 1, 2024

மேட்டுப்பாளையம் – மதுரை ரயில் சேவை நீட்டிப்பு

image

மதுரை ரயில்வே இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக இயக்கப்பட்ட “மேட்டுப்பாளையம் வாரந்திர சிறப்பு ரயில்” (06030) சேவை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு வசதி உண்டு. முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 1, 2024

மதுரையில் சிப்காட் மையம்

image

தமிழ்நாட்டில் ஓசூர், ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க மக்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அதற்காக வஞ்சிநகரத்தில் 279 ஏக்கர் நிலமும், தல்லாகுளத்தில் 15 ஏக்கர் நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் 3 ஆவது சிப்காட் புத்தாக்க மையம் மதுரையில் அமைய உள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

மதுரையில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

image

ஆடி அமாவாசையை ஒட்டி சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல ஆக.1 முதல் ஆக.5 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் சதுரகிரி மலையை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்பட உள்ளது. இதனால் ஆக.3,4 ஆகிய 2 நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு

image

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோவிலில் இன்று(ஆக., 1) முதல் 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும்(01-08-24) அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 1, 2024

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு

image

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோவிலில் இன்று(ஆக., 1) முதல் 5 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும்(01-08-24) அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 1, 2024

மதுரையில் மேலும் ஒரு கடத்தல் சம்பவம்

image

மதுரையை சேர்ந்த பிரவீன் என்பவரது போனை பறித்த மணிமாறன் என்ற நபர், பிரவீன் தன் காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து பிரவீன் தன் காதலி, அவரது உறவினரான சிறுவனுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. சிறுவனை மீட்ட போலீசார் மணிமாறன், அவரது தாய் கவிதா உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.

News August 1, 2024

மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

image

மதுரையில் கடந்த 11 ஆம் தேதி ரூ.2 கோடி பணம் கேட்டு பள்ளி மாணவர், ஆட்டோ ஓட்டுநருடன் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் காவலர் செந்தில்குமார், அப்துல் காதர், வீரமணி, காளிராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சூர்யா என்ற பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஐகோட் மகாராஜவை நேற்று தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

News August 1, 2024

13 நாளில் 9 ரயில் விபத்து: MP வெங்கடேசன் சாடல்

image

மக்களவையில் நேற்று(ஜூலை 31) நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மதுரை MP சு.வெங்கடேசன், “ஒரு காலத்தில் இரயில்வேக்கு என்று தனிபட்ஜெட் இருந்தது. நாடாளுமன்றத்தில் அதனைப்பற்றிய விவாதம் நடக்கும். ஆனால் ரயில்வே பட்ஜட்டையே ஒழித்துக்கட்டிய பெருமை பாஜகவையே சாரும். இதனால்தான் 13 நாளில் 9 ரயில் விபத்துகள் நடந்துள்ளது” என மத்திய அரசை சாடினார்.

error: Content is protected !!