Madurai

News October 29, 2024

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அக் 29 அன்று விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும் வாக்கு சாவடிகளில் நவ,16&17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

News October 29, 2024

திருமணத்தை மீறிய உறவால் கனவர் கொலை

image

மதுரை அலங்காநல்லூர் கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜோதிகா உடப்பன் என்பவரிடம் கடந்த ஒரு வருடமாக தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் மீண்டும் கணவரோடு வாழ்ந்து வந்த நிலையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று உடப்பனுடன், ஜோதிகா ஆகியோர் இணைந்து சரவணனை கொலை செய்தனர்.

News October 29, 2024

 மின் விபத்தை தவிர்க்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

image

பருவமழை காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கவும், மின் உபகரணம் பழுதடைவது குறித்த தகவல்களை வாரியத்தில் தெரிவிக்க அலைபேசி எண்களை மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி தெரிவித்துள்ளார். அதன்படி உசிலம்பட்டி கோட்டம் – 9445852888, திருமங்கலம் கோட்டம் – 9445852828, சமயநல்லூர் கோட்டம் – 9445852900, மதுரை கிழக்கு கோட்டம் – 9445852848 எண்களில் பொதுமக்கள் தங்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

மதுரை துணை ஆட்சியர் மாற்றம்

image

தமிழ்நாடு அரசு 29 துணை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி விருதுநகர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக இருந்த கார்த்திகாயினி மதுரையின் வருவாய் கோட்டாட்சியராக பணி மாற்றம் செய்யப்படுகிறார். துணை ஆட்சியராக இருந்த வெ.ஜெயந்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

News October 29, 2024

பாதுகாப்பு பணியில் 3000 போலீசார்

image

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு பணியில் 3000 போலீசார், 3 சிறப்பு பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை வழியாக பசும்பொன்னுக்கு வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செல்லக்கூடிய வழித்தடங்கள், போலீஸ் அனுமதி சீட்டு குறித்து செக்போஸ்டில் போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள் என மதுரை மாநகர் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 29, 2024

திமுகவுக்கு விஜய்யை வாழ்த்த மனமில்லை

image

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார். விஜய்யின் படங்கள் போலவே அவருடைய கட்சி மாநாடு தொடக்கம் நன்றாக உள்ளது. விஜய்யின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் கடலில் ஆழ்ந்துள்ளனர். திமுகவில் உள்ள 60 சதவீத இளைஞர்கள் விஜயின் ரசிகர்களாக இருப்பதால் திமுகவுக்கு விஜயை வாழ்த்த மனமில்லை. திமுகவின் இளைஞர் வட்டாரம் விஜய் கட்சிக்கு வந்ததால் திமுகவினர் குத்துதே குடையுதே என பேசி வருகிறார்கள் என்றார்.

News October 29, 2024

முதல்வர் வருகையால் டிரோன்கள் பறக்கத் தடை

image

முத்துராமலிங்கத் தேவரின் 117 ஆவது குருபூஜை விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதுரை வருகிறார். இதனால் மதுரை விமான நிலையம், மதுரை மாநகர, மாவட்ட எல்லைக்குள் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.29,30) டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

விஜய் வருகை உதயநிதிக்கு தான் சவால் – வைகை செல்வன்

image

 நடிகர் விஜய் த.வெ.கழகம் துவங்கி, மாநாட்டில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். குறிப்பாக அவரது வருகை தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு பலத்த அதிர்வை ஏற்படுத்தும். முதல்வர் கனவில் உள்ள உதயநிதிக்கு பெரும் சவாலாக அமையும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 

News October 29, 2024

ஶ்ரீகள்ளழகர் கோயிலில் “தைலக்காப்பு உற்சவம்”

image

மதுரை ஶ்ரீகள்ளழகர் கோயிலில் “தைலக்காப்பு உற்சவம்” ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு உற்சவம் நவம்பர் 13 அன்று நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில், ஶ்ரீகள்ளழகர் எழுந்தருளி திருமஞ்சனம் காணும் நிகழ்வு தைலக்காப்பு உற்சவம் ஆகும். மூன்று நாட்கள் நடைபெறும், இந்த நிகழ்ச்சி வரும் நவம்பர் 11 – 13 வரை நடைபெற உள்ளது.

News October 29, 2024

விளையாட்டுகளில் யாரையும் புறக்கணிக்கக் கூடாது – ஐகோர்ட் 

image

விளையாட்டு போட்டி குறித்து தாக்கலான பொதுநல மனுவை நேற்று விசாரித்த மதுரைக் கிளை நீதிபதி,  விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பிரிவினரை சமூகப் புறக்கணிப்பு செய்வதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் தரப்பில் உரிய பங்களிப்பு தொகை பெற்று இரு தரப்பினரும் சேர்ந்து விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் போட்டி நடத்த போலீஸார் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டார்.