Madurai

News July 16, 2024

மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில்

image

மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை வாரம் இருமுறை இயக்கப்படும் ‘தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் தொடங்க இருக்கிறது. இந்த ரயிலானது கோவை, பொள்ளாச்சி, பழனி மற்றும் மதுரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இந்த ரயில் சேவையை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

News July 16, 2024

6 கோடியில் அமையும் ஒலிம்பிக் அகாடமி

image

மதுரையில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில், 6 கோடி ரூபாய் மதிப்பில் ஒலிம்பிக் அகாடமி, 8 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும் என தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது முதல்கட்டமாக 6 கோடி மதிப்பில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

News July 15, 2024

39 புதிய அரசுப் பேருந்துகள் சேவை துவக்கம்

image

மதுரையில் இன்று புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை MGR பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, நாகர்கோவில், மூணார், இராமேஸ்வரம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 26 புதிய பேருந்துகளும், 13 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் இன்று தொடங்கி வைப்பட்டது.

News July 15, 2024

கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை

image

திருமங்கலம் – கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு வலுத்து வருவதால், ஆட்சியர் தலைமையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வரும் 18ஆம் தேதி சுங்கச்சாவடி தலைமை அலுவலர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால், 18ஆம் தேதி வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News July 15, 2024

மதுரை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

image

மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவு வாயிலில் IOW அலுவலகம் முன்பு இன்று(ஜூலை 15) காலை NPS-ஐ (National pension scheme) ரத்து செய்து OPS-ஐ(Old pension scheme) வழங்குக எனக் கோரியும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் SRMU மதுரை கோட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை கோட்ட செயலாளர் ரபிக் சிறப்புரை ஆற்றினார். மதுரை அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

சர்ச்சை ஆடியோ – விளக்கம் அளித்த செல்லூர் ராஜு

image

மதுரையில் அதிமுக கட்சி நிர்வாகியை ஒருமையில் பேசி மிரட்டும் ஆடியோ குறித்தும் எனக்கும் ஏதும் தெரியாது என செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று வேலையாக வெளியில் இருந்தேன் என்றும், அதனால் அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும், அது என்னவென்று கேட்டு தெரிந்துகொண்ட பிறகு பேசுகிறேன் என விளக்கம் அளித்தார்.

News July 15, 2024

மதுரையில் காலை உணவுத் திட்டம் தொடங்கியது

image

தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், காமராஜர் பிறந்த நாளான இன்று தொடங்கப்பட்டது. மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில், ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, முதலமைச்சரின் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுடன் காலை உணவை சாப்பிட்டார்.

News July 15, 2024

மதுரையில் காலை உணவு திட்டம்: மாவட்ட செயலாளர் தொடக்கம்

image

மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட காலை உணவு திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை திருவள்ளூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மதுரையில் திமுக மாவட்ட செயலாளர் சேடபட்டி மு மணிமாறன் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி ஒன்றில் தொடங்கி வைத்த அவர், பள்ளி குழந்தைகளுக்கு உணவை ஊட்டிவிட்டு, தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

News July 15, 2024

கலைஞர் நூலகத்தில் 9.51 லட்சம் பேர் பயன்

image

மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள 7 தளங்களைக் கொண்ட உலகத் தரத்திலான கலைஞர் நூற்றாண்டு நூலகம், கடந்தாண்டு ஜூலை 15ஆம் தேதி திறக்கப்பட்டது. நூலகம் திறக்கப்பட்ட ஓராண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,614 பேர் வீதம், 9.51 லட்சம் பேர் இந்நூலகத்தை பயன்படுத்தியுள்ளனர். இதில், பள்ளி மாணவர்கள் 1.13 லட்சம் பேர், கல்லூரி மாணவர்கள் 17,823 பேர், வெளிநாட்டவர் 173 பேர் பயன்பெற்றுள்ளதாக நூலக நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 15, 2024

1000 பேர் பங்கேற்கும் ஆன்மீக பயணம்

image

மதுரை மாவட்டத்தில், ஆடி மாதத்தில் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக 1000 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. ஆடி மாத ஆன்மிக பயணம் 4 கட்டங்களாக, வரும் 19ஆம் தேதி, 26ஆம் தேதி, ஆக.2ஆம் தேதி, 9ஆம் தேதிகளில் தொடங்குகிறது. இதில், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம் எனவும் இந்து அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.

error: Content is protected !!