Madurai

News August 3, 2024

மதுரையில் சதம் அடித்த வெயில்

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதற்கு ஈடாக வெயிலும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதில், அதிகப்பட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 3, 2024

மதுரையில் நாளை பசுமை நடை பயணம்!

image

மதுரை அச்சம்பத்து ஏற்குடி மலைப்பகுதியில் நாளை(ஆக.04) பசுமை நடை பயணம் நடைபெற உள்ளது. பசுமை நடை பயணத்தில் மலைப்பகுதியில் தமிழி கல்வெட்டுகள், நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விளக்க உரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே பாரம்பரிய பசுமை நடை பயணத்தில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 3, 2024

வானதி சீனிவாசனுக்கு சு.வெங்கடேசன் பதிலடி

image

சு.வெங்கடேசன் ரயில்வே துறை வரவு செலவு அறிக்கை மீதான வாதத்தில் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதற்கு சு.வெங்கடேசன் மக்களை ஏமாற்ற நினைப்பவர்களை அம்பலப்படுத்துவோம் என வானதி சீனிவாசனுக்கு பதிலடி கொடுத்து பதிலளித்துள்ளார்.

News August 3, 2024

மாமதுரை விழா பெரியாரில் சிற்பங்கள்

image

மதுரையில் மாமதுரை விழா”நடைபெற உள்ளதையொட்டி, பெரியாா் பேருந்து நிலையம் பகுதியில் அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் சாா்பில் ஆகஸ்ட் 8, 9, 10, 11 ஆகிய 4 நாள்களில் மாமதுரை விழா” கொண்டாடப்படவுள்ளது. மதுரை தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூா் குளம், மடீட்சியா அரங்கம், வைகைக் கரை உள்ளிட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

News August 3, 2024

5 நாட்களுக்கு பயணிகள் ரயில் ரத்து

image

மதுரை, திருவனந்தபுரம் கோட்டங்களில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆக.5, 6, 8, 9, 11 ஆகிய 5 நாட்களுக்கு மதுரை – ராமநாதபுரம் இடையேயான பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மேலும் குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் 4 நாட்களுக்கு மதுரை, திண்டுக்கல் செல்லாமல் மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

தமிழக அளவில் முதல் இடம் பிடித்த மதுரை

image

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வருகிறது. இன்று தமிழகத்தின் நான்கு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை விமான நிலையத்தில் தமிழக அளவில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News August 2, 2024

நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

image

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

News August 2, 2024

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.157 கோடி ஒதுக்கீடு

image

மதுரை எய்ம்ஸ் குறித்து எம்.பி சச்சிதானந்தம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய மத்திய அமைச்சர் சுகாதார துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கு ரூ.157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி அக்டோபர் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

மதுரையில் 278 ஏக்கரில் புதிய சிப்காட்

image

மதுரை சிப்காட் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மேலுாரில் அரசு நிலத்தில் 278 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான சாலைவசதி, கழிவுநீர், மின்சார வசதி, குடிநீர் வசதி, டிரக் செல்லும் வசதி குறித்து பொறியாளர்கள் அளவெடுத்துள்ளனர். 2 வாரங்களுக்குள் விரிவான திட்ட அறிக்கைக்கான (டி.பி.ஆர்.) டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

பாலியல் தொல்லையா? நீதிபதி அட்வைஸ்

image

இளம்பெண்களாகிய உங்களுக்கோ, அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கோ ஏதாவது பாலியல் ரீதியிலான சம்பவங்கள் நடக்கும்போது உடனடியாக போலீசாருக்கோ அல்லது நம்பிக்கையானவர்களிடமோ தைரியமாக தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிபதி அனுராதா அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இதன்மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

error: Content is protected !!