Madurai

News August 4, 2024

“தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை கொண்டாடவில்லை”

image

இலங்கை “யாழ்ப்பாண தமிழர்களை போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை கொண்டாடவில்லை” என ஐகோர்ட் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ)சார்பில் வழக்கறிஞர் பிரபுராஜதுரை எழுதியுள்ள நூல் அறிமுக விழாவில் இன்று பேசியவர், “ஆங்கிலம் பிழைப்புக்கான மொழி. ஆங்கில மொழியை தவிர்த்துவிட்டு பிழைப்பு நடந்த முடியாத அளவுக்கு ஆங்கிலம் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டது” என்றார்.

News August 4, 2024

மதுரை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

மதுரையில் மாமதுரை பாடல் வெளியீடு

image

மதுரையில் யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8,9,10,11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்களுக்கு விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள்,பாரம்பரிய நடைபயணம்,உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கம் வளர்த்த மாமதுரை என்ற பாடலை மதுரை எம்பி சு.வெங்கடேசன் தலைமையில்
வெளியிடப்பட்டுள்ளது.

News August 4, 2024

BREAKING ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது

image

மதுரை சுந்தர்ராஜபுரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடமிருந்து 3 வாள்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் அவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 4, 2024

மதுரையில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

தீபாவளி பண்டிகைக்கு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க செப்.4க்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், சாலையோர பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி தரப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர்.

News August 4, 2024

நட்புன்னா என்னன்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் யரும் இல்லை. மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை ஆறு, கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் நாம் செய்த சேட்டைகள் பல உண்டு . அந்த வகையில் உங்க நண்பன் பெயர்,அவருடன் நீங்கள் செய்த சேட்டையை கீழே கமெண்ட் பண்ணி, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 929614 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

News August 4, 2024

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி மாற்றம்

image

மதுரை மாநகராட்சி ஆணையர்கள், துணை இயக்குனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் 25 பேர் அதிரடியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்தில் மதுரை மாநகராட்சி துணை ஆணையாளர் கே.சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட நாட்கள் பணியாற்றியதன் அடிப்படையில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News August 4, 2024

மதுரை பத்திரப்பதிவில் ரூ.367.35 கோடி வருவாய்

image

மதுரையில் ஆடிப்பெருக்கையொட்டி நேற்று(ஆக.3) அனைத்து சார் பதிவு அலுவலகமும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 52 சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெற்றது. அதில் 1465 பதிரங்கள் பதிவாகி ரூ.8.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஏப்.1 முதல் நேற்று வரை 99,732 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.367.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

News August 3, 2024

மதுரையில் சதம் அடித்த வெயில்

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதற்கு ஈடாக வெயிலும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதில், அதிகப்பட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!