India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ரத்தினவேலு விடுத்துள்ள அறிக்கையில், “அரிசி, கோதுமை, பருப்பு, மைதா ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிப்பதில் குழப்பம் நிலவுகிறது. கோதுமையை வேளாண் பொருளாகவும், அரிசியை ஆலையில் தயாரிக்கும் பொருள் என்ற அடிப்படையிலும் வரி விதிப்பதை ஏற்க முடியாது. இதைத் தவிர்க்க அனைத்து உணவுப் பொருட்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட நூலகத்தில் வாசகர்களுக்கு தேவையான ஆண் பெண் கழிவறை, குடிநீர், இணையதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று (ஆக.06) விசாரணைக்கு வந்தபோது, நூலகத்தை பராமரிக்க 97 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று(ஆக.,5) காரில் வந்த மதிமுக நிர்வாகிகள் பச்சமுத்து, அமிர்தராஜ், புலிசேகர் ஆகியோர் மேலூர் சுங்க சாவடி அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், முறையாக லாரியை நிறுத்தாததே விபத்துக்கு காரணம் என திருச்சி தொட்டியத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரை(37) இன்று மேலூர் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு குற்றங்களில் சம்பந்தப்பட்ட 54 வாகனங்களின் ஏலம் மாவட்ட எஸ்பி அர்விந்த் தலைமையில் ஆக.10 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் வாகனங்களை பார்வையிட்டு, இருசக்கர வாகனத்திற்கு ரூ.5,000, 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆக.8, 9 ஆம் தேதியில் செலுத்தி ரசீது பெறலாம்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசை சங்க பொன்விழாவை முன்னிட்டு, கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு “முத்தமிழ் பேரறிஞர் விருதை” அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வழங்கினார். விருதை பெற்றுக் கொண்டு பேசிய வைரமுத்து, “கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, உ.வே.சா போன்றோருக்கு வழங்கப்பட்ட விருதை, நானும் பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று கூறினார். உங்களுக்கு பிடித்த வைரமுத்துவின் பாடல் எது?
மதுரை மாநகர காவல்துறையின் துப்பறியும் நாய் படை பிரிவில் வெடிகுண்டு, போதைப்பொருட்கள், குற்றங்கள் போன்றவற்றை கண்டறிய 8 நாய்கள் உள்ளன. தற்போது நி100 நாட்கள் ஆன ‘லேபர் டாக் ரெட் ரிவர்’ இனத்தைச் சேர்ந்த நாய் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பறியும் நாய்க்கு காவல் ஆணையர் லோகநாதன் ‘அழகர்’ என பெயர் சூட்டினார். மேலும் 6 மாத கால வெடிகுண்டு பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். SHARE IT.
மதுரை மாவட்டம் திருவாதவூரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜமாணிக்கம் தற்போது கேரள மாநில தேவசம் போர்டு வருவாய் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் ஹூபர்ட் எச்.ஹம்ப்ரீ பெல்லோஷிப் படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ஒருவருக்கே இந்தப் பல்கலையில் பெல்லோஷிப் படிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது இபிஎஸ் தும்மினாலும் கூட பதவி விலக வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளை சம்பவம், போதை பொருள் நடமாட்டத்திற்கு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளச்சராயத்திற்கு எதிராக இந்த அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த மதிமுக தொண்டரணி அமைப்பாளர் பச்சமுத்து, நிர்வாகி அமல்ராஜ், புலிசேகர் ஆகியோர் நேற்று சென்னையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று (ஆக.05) காரில் மதுரை திரும்பிய நிலையில் மேலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
Sorry, no posts matched your criteria.