India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் ஆக.10 அன்று குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு ஆகிய சேவையை பெறலாம்.
திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15, 22, 29, செப்டம்பர் 5 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 18 இல் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 16, 17 இல் நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் செங்கல்பட்டு நிலையத்திலிருந்து புறப்படும்.
மதுரை மாநகரில் பணியாற்றிய 431 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகரில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த 431 காவலர்களை மதுரை மாநகர சரகத்திற்குட்பட்ட வெவ்வேறு காவல் நிலையங்கள், வெவ்வேறு பணி பிரிவுகளுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார். நீண்ட நாட்களாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றியதன் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 5.63 ஏக்கர் இடத்தில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 12 தளங்களை கொண்ட டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கான இ- டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. www.tntenders.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் டெண்டர் எடுக்கும் நபர்கள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று(ஆக.,6) காரில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுடன் சென்ற சங்கரன்கோவிலை சேர்ந்த விஷ்ணு சங்கர்(35), தங்கராஜ்(42), சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சீமைசாமி(56), கோபாலகிருஷ்ணன்(33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், மதுரை பேரையூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து கள்ளநோட்டு அச்சடித்தது தெரியவரவே அங்கு போலீசார் அதிரடி ஆய்வு நடத்தி அச்சடித்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே முத்தனம்பட்டி கிராமத்தில் உள்ள மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று(6-8-24) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட செயலாளரை சந்தித்து நலம் விசாரித்தார்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமுறைகளை மீறி உரிய வரைபட அனுமதி இல்லாமல் 2 அடுக்கு 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள 1,869 கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று (ஆக.06) உத்தரவிட்டுள்ளது. விதிமீறி கட்டப்பட்ட கட்டட உரிமையாளர்கள் வரைபட அனுமதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ரத்தினவேலு விடுத்துள்ள அறிக்கையில், “அரிசி, கோதுமை, பருப்பு, மைதா ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிப்பதில் குழப்பம் நிலவுகிறது. கோதுமையை வேளாண் பொருளாகவும், அரிசியை ஆலையில் தயாரிக்கும் பொருள் என்ற அடிப்படையிலும் வரி விதிப்பதை ஏற்க முடியாது. இதைத் தவிர்க்க அனைத்து உணவுப் பொருட்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.