India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை சமயநல்லூரில் பெட்கிராட் நிறுவனம் சார்பில் 3 மாத கால இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, அலைபேசி சர்வீஸ் பயிற்சி நடத்தப்பட உள்ளது. எம்.எஸ்.வேர்டு, எக்ஸெல், பவர் பாயின்ட், போட்டோஷாப், கோரல் டிரா, ஹார்டுவேர் &, அலைபேசி பழுதுநீக்கும் பயிற்சியும் அளிக்கப்படும். 17 வயதான ஆண், பெண்கள் பங்கேற்கலாம், மத்திய, மாநில அரசு மானியத்துடன் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ விமான நிறுவனங்கள் மதுரை – ஹைதராபாத் தினசரி சேவையை அளித்து வருகின்றன. இந்த விமானம் தினசரி ஹைதராபாத்திலிருந்து காலை 10.25க்கு புறப்பட்டு பகல் 12.20க்கு மதுரைக்கும், மறுமார்க்கமாக பகல் 12.45க்கு புறப்பட்டு மதியம் 2.30க்கு ஹைதராபாத் சென்றடையும். தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களுக்காக இச்சேவை வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்ரூத் திட்டத்தில் ரூ.1,295 கோடி மதிப்பீடில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 90% நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், விழா நடத்துவதற்கான தேதி கேட்டு மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக மேயர் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மைக்ரோசாப்ட் இயங்குதளம் முடங்கியுள்ளதால் மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் வருவதிலும், இங்கிருந்து புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விமானத்தில் செல்லக்கூடிய போர்டிங் பாஸ் தற்காலிகமாக கைகளால் எழுதி பயணிகளிடம் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான விமான சேவை ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணி மேற்கொண்டதால் அதனை ஈடு செய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நாளை இயங்காது என மாவட்ட வழங்கல் அலுவலர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20ம் ஆண்டு நிறைவு விழா நாளை (ஜூலை 20), மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள உள் அரங்கில் நடை பெற உள்ளது. இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் M.M. சுந்தரேஷ், விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சூர்யகாந்த், B.R.கவாய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை ரயில் நிலையம் ரூ. 347.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் சுரங்கப்பாதை, ஸ்கைவாக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 2025ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் முதலமைச்சர் உள்ளதாக Ex அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். சேடப்பட்டியில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு சரியான பாடத்தை புகட்டி மீண்டும் ஈபிஎஸ்யை முதலமைச்சராக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், கோயில் நகராக இருந்த மதுரை சமூக விரோதிகளின் கூடாரகமாக மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு இன்று (ஜூலை 19) ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலானது இரவு 11.20 கிளம்பி, நாளை காலை 11.20க்கு திருநெல்வேலி வந்து சேரும்.
Sorry, no posts matched your criteria.