India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பி, துணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாநகர் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக இருந்த வேல்முருகன் மதுரை சரக டிஎஸ்பி-யாகவும், இதேபோல் மேலூர் டிஎஸ்பி ப்ரீத்தி ராஜபாளையம் சரக டிஎஸ்பி-யாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருநெல்வேலியில் இருந்து டிஎஸ்பி பாலசுந்தரம் மதுரை ஊமச்சிகுளம் டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்ட விழா நாளை காலை 6.50 மணிக்கு துவங்க உள்ளது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், சமயநல்லூர் மக்கள் மன்றம் அரங்கில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று (20.07.2024) ‘ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்’ முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வருவாய், வேளாண், கூட்டுறவு, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கை மனுக்களை வழங்க பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20வது ஆண்டு நிறைவு விழா இன்று மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க மதுரை வருகை தந்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் ஆயுதங்களுடன் சுற்றிய 7 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு தீவிரமாக நடைபெறும் என எச்சரித்துள்ளனர்.
மதுரை நகர உளவுத்துறை உதவி ஆணையர்(AC) வேல்முருகன், மேலூர் உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரத்தை, மதுரை மாவட்டம் ஒமைச்சக்குளம் உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று(ஜூலை 20) உத்தரவிட்டுள்ளார்.
மதுரை சமயநல்லூரில் பெட்கிராட் நிறுவனம் சார்பில் 3 மாத கால இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, அலைபேசி சர்வீஸ் பயிற்சி நடத்தப்பட உள்ளது. எம்.எஸ்.வேர்டு, எக்ஸெல், பவர் பாயின்ட், போட்டோஷாப், கோரல் டிரா, ஹார்டுவேர் &, அலைபேசி பழுதுநீக்கும் பயிற்சியும் அளிக்கப்படும். 17 வயதான ஆண், பெண்கள் பங்கேற்கலாம், மத்திய, மாநில அரசு மானியத்துடன் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ விமான நிறுவனங்கள் மதுரை – ஹைதராபாத் தினசரி சேவையை அளித்து வருகின்றன. இந்த விமானம் தினசரி ஹைதராபாத்திலிருந்து காலை 10.25க்கு புறப்பட்டு பகல் 12.20க்கு மதுரைக்கும், மறுமார்க்கமாக பகல் 12.45க்கு புறப்பட்டு மதியம் 2.30க்கு ஹைதராபாத் சென்றடையும். தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களுக்காக இச்சேவை வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்ரூத் திட்டத்தில் ரூ.1,295 கோடி மதிப்பீடில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 90% நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், விழா நடத்துவதற்கான தேதி கேட்டு மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக மேயர் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
Sorry, no posts matched your criteria.