India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் 14வயது பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி சூர்யா இன்று குஜராத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வருவதையறிந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை வருவாய் மாவட்ட அதிமுகவை நிர்வாக ரீதியாக 5 மாவட்டங்களாகப் பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக 3 மாவட்டங்களாகச் செயல்படுகிறது. அதிமுகவின் தொடர் தோல்வியை தொடர்ந்து 5 மாவட்டங்களாக பிரித்து தேர்தல் களப்பணியை தீவிரப்படுத்தி, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் நோக்கில் இம்முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் சமீபத்தில் சி.ஐ.எஸ்.சி.இ சார்பில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில் மதுரை விகாசா பள்ளி மாணவி தேஜஸ்வினி 19-வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு தகுதியாகியுள்ளார்.
பாஜகவில் இருந்து 200 நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மதுரை மாநாகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் அதிருப்தி தெரிவித்து பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சில முக்கிய நிர்வாகிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்படுகின்றனர். ஒன்றரை ஆண்டுக்குள் 200 பேரை பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளிக்குடி, குராயூர், சிவரக்கோட்டை பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.40,750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.815 செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய ஆக.31 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் பெயர், ‘உயா்நீதிமன்ற மதுரை அமர்வு என மாற்றப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20ஆம் ஆண்டு விழாவில், இந்தப் புதிய பெயா்ப் பலகையை காணொலி காட்சி மூலமாக, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், ‘உயர்நீதிமன்ற மதுரை கிளை’ என்ற பெயர் மாற்றப்பட்டது.
வேளாண் துறை சார்ந்த சுயதொழில் புரிய பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக, சேடப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், “மத்திய அரசு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சுயதொழில் புரிய விரும்புவோர் வயது 21- 40க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மூட்டா அமைப்பினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 276 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த அரிட்டாபட்டி சூழலியல் செயற்பாட்டாளர் ரவிச்சந்திரனின் மறைவுக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இரங்கலை தெரிவித்துள்ளார். அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அரசு அறிவித்ததற்கு காரணமாக இருந்ததில் ரவிச்சந்திரனின் செயல்பாடு மிக முக்கியமானது. அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதல் தெரிவித்துள்ளார். இதேபோல் இவரது மறைவிற்கு சகாயம் ஐஏஎஸ் இரங்கலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.